வாஷிங்டன்:
கிரீன் கார்டு பற்றி அனைவரும் அறிந்ததே.
அமெரிக்காவில் நிரந்தரமாக தங்கி பணி புரிய விரும்புகிற பிற நாட்டினருக்கு
'கிரீன் கார்டு' வழங்கப்படுகிறது. அங்கு 3 ஆண்டு காலம் தங்கி வேலை செய்ய
விரும்புகிற வெளிநாட்டினருக்கு 'எச்-1பி' விசா தரப்படுகிறது.
'எச்-1பி'
விசாதாரர்களில் மிகவும் திறமையும், தகுதியும் வாய்ந்த 7 சதவீதம்
பேருக்குத்தான் நிரந்தரமாக தங்கி வேலை செய்ய வசதியாக 'கிரீன் கார்டு'
தரப்படுகிறது. அதுவும் விண்ணப்ப மூப்பு அடிப்படையில் தரப்படுவதால், 'கிரீன்
கார்டு'க்காக ஆண்டுக்கணக்கில் காத்திருக்கும் நிலை ஏற்படுகிறது.
இந்நிலையில்,
அமெரிக்காவில் குடும்பத்தார் மூலம் கிடைக்கப்பெறும் கிரீன் கார்டு அல்லது
சட்டப்பூர்வ நிரந்தர குடியுரிமை பெறுவதற்கு 2 லட்சத்து 27 ஆயிரம்
இந்தியர்கள் காத்திருப்பதாக அரசு தரப்பு தரவுகள் தெரிவிக்கின்றன.
No comments:
Post a Comment