
மணப்பாறை அருகே சுடுகாட்டுப்பட்டியில் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த
சிறுவன் சுஜித் 88 மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு சடலமாக
மீட்கப்பட்டான்.

இந்த
சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. சிறுவன்
சுஜித்தின் மரணம் குறித்து பல்வேறு கருத்துக்கள் எழுந்த வண்ணம் உள்ளன. பல
தலைவர்கள் நேரில் சென்று சுஜித்தின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி
வருகின்றனர்.
சிறுவன் இறந்த அன்றே திமுக தலைவர் மு.க ஸ்டாலின் ரூ.5 லட்சம் நிதியுதவி அளித்தார்.
அதனைத்
தொடர்ந்து, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சுஜித் வீட்டிற்குச் சென்று
ஆறுதல் கூறிய பிறகு, பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.10 லட்சமும், அதிமுக
சார்பாக ரூ.10 லட்சமும் வழங்கப்படும் என்று தெரிவித்தார். முதல்வர் கொடுத்த
வாக்குறுதியின் படி, இன்று பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.10
லட்சத்திற்கான காசோலையைத் திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு நேரில் சென்று
சுஜித்தின் குடும்பத்தினரிடம் வழங்கினார்.
No comments:
Post a Comment