
அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில்
கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் வானிலை ஆய்வு
மையம் மழை குறித்து கூறுகையில்,அந்தமானில் அடுத்த 24 மணி நேரத்தில்
காற்றழுத்த தாழ்வு பகுதி ஒன்று உருவாக வாய்ப்பு உள்ளது.மேலும் காற்றழுத்த
தாழ்வு நிலை உருவான பிறகே தமிழகத்தில் மழைக்கான வாய்ப்பு குறித்து
தெரிவிக்க முடியும் என்றும் தெரிவித்துள்ளது. காற்றின் காரணமாக தமிழகத்தில்
ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று சென்னையை பொறுத்தவரையில்
வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது
என்றும் தெரிவிக்கப்பட்டுளள்து.
No comments:
Post a Comment