
ஐந்தாண்டுகள் மகாராஷ்டிராவின் முதல்வராக இருந்த தேவேந்திர பட்னாவிஸ்
கடந்த மாதம் 24-ம் தேதி அன்றும் மகிழ்வுடன் இருந்தார். இரண்டாவது முறையாக
அரியாசனத்தில் அமரப்போகிறோம் என்கிற பெருமிதம் அவரிடம் இருந்தது. ஆனால்,
அடுத்த நாளே அவரது ஆசையை, நிராசையாக்கியது கூட்டணிக் கட்சியான சிவசேனா.
ஆம்! நாடு முழுவதும் கோலோச்சிய பி.ஜே.பி-க்கு மகாராஷ்டிராவில் ஆட்டம்
காட்டிவருகிறது சிவசேனா.

மகாராஷ்டிரா
மாநிலத்தில் நடைபெற்ற சட்டமன்றப் பொதுத்தேர்தலில் ஆளும் பா.ஜ.க 105
இடங்களிலும் சிவசேனா 56 இடங்களிலும் வெற்றி பெற்றது.
மற்றொரு புறம் காங்கிரஸ் 44 இடங்களிலும் தேசியவாத
காங்கிரஸ் 54 இடங்களிலும் வெற்றிபெற்றன. பெரும்பான்மைக்குத் தேவையான 145
இடங்களுக்கும் அதிகமாக சிவசேனா, பி.ஜே.பி கூட்டணி வெற்றிபெற்றுள்ளது.
ஆனால், அந்தக் கூட்டணிக்குள் எழுந்துள்ள பூசலால் ஆட்சியை அமைக்க முடியாமல்
திணறிவருகிறது பி.ஜே.பி.
சிவசேனா
தரப்பில் முதல் இரண்டரை ஆண்டுகள் தங்கள் கட்சியின் சார்பில் முதல்வர்
பதவியை வகிப்பது என்றும் அடுத்த இரண்டரை ஆண்டுகள் பி.ஜே.பி சார்பில்
முதல்வர் பதவியை வைத்துக்கொள்ளலாம் என்றும் தேர்தலுக்கு முன்னரே பேசி
முடிக்கப்பட்டுவிட்டதாகச் சொல்கிறார்கள்.
மேலும், அமைச்சரவையில்
சரிபாதி இடங்கள் தங்களுக்கு வேண்டும் என்று சிவசேனா கேட்கிறது. இவர்களின்
இரண்டு கோரிக்கையுமே பி.ஜே.பி தரப்பு ஏற்றுக்கொள்ள மறுக்கிறது. இதனால்
தேர்தல் முடிவு வெளியாகி ஒருவாரத்தைக் கடந்தும் முடிவு எட்டமுடியாத நிலை
அங்கு நிலவுகிறது.
பி.ஜே.பி
தலைவர் அமித் ஷா நேரடியாக மகாராஷ்டிரா வந்து சிவசேனா தலைவர் உத்தவ்
தாக்கரேவைச் சந்திக்க முடிவு செய்தார். ஆனால், அவரைச் சந்திக்க உத்தவ்
தாக்கரே தொடர்ந்து மறுத்துவருகிறார். இதுதான் பி.ஜே.பி-க்கு அதிர்ச்சியை
ஏற்படுத்தியுள்ளது.
மாநிலக் கட்சிகளை வளைப்பதிலும் கட்சிகளை
உடைப்பதிலும் அமித் ஷாவின் `மாஸ்டர் மைண்ட்' இதுவரை தப்பியது இல்லை. ஆனால்,
மகாராஷ்டிரா விஷயத்தில் இந்தத் திட்டங்கள் பலிக்கவில்லை. மேலும் உத்தவ் தாக்கரே
மீது மத்திய அரசு அழுத்தம் கொடுக்க வேறு சில யுக்திகளைக் கையாளலாம் என்று
அந்தக் கட்சிக்குச் சந்தேகம் உள்ளது. அப்படியொரு நிலை வந்தால் நீதிமன்றம்
மூலமாகவே அதைப் பார்த்துக்கொள்ளலாம்.
அதற்காக பி.ஜே.பி-யிடம் பணிந்து
போக வேண்டிய அவசியமில்லை என்ற முடிவுக்கு வந்துள்ளது. சிவசேனாவுக்கு
முக்கியமே மும்பை மாநகரம் மட்டுமே. அந்த மாநகராட்சி எப்போதும் தங்களது
கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என்றே நினைக்கும். ஆனால், முதல்முறையாக
மாநில ஆட்சிக்கு இவ்வளவு நெருக்கடியைத் தந்தது பி.ஜே.பி-க்கு அதிர்ச்சியை
ஏற்படுத்தியுள்ளது.
சிவசேனா
வசம் முதல்வர் பொறுப்பைக் கொடுத்தால் அது தங்களுக்குச் சிக்கலாகிவிடும்.
எதிர்காலத்தில் பி.ஜே.பி-யின் செல்வாக்கை அவர்கள் உடைத்துவிடுவார்கள்.
மேலும், அவர்கள் இரண்டரை வரும் ஆட்சி செய்துவிட்டு, பிறகு ஆட்சியைக்
கவிழ்த்தாலும் சிக்கலாகிவிடும்" என்று பி.ஜே.பி யோசிக்கிறது.
சிவசேனாவோ,
`` பி.ஜே.பி இத்தனை தொகுதிகளில் வெற்றிபெற்றதற்குக் காரணமே நாங்கள்தான்.
இல்லையென்றால் அவர்களால் மீண்டும் ஆட்சி என்பதைக் கனவில் கூட
நினைத்துப்பார்க்க முடியாது" என்கிறது.
இருவரில் யார் பெரியவர் என்கிற மறைமுகப் போட்டியே அங்கு இப்போது குழப்பத்துக்குக் காரணமாக உள்ளது.
No comments:
Post a Comment