
மரத்தின் மீது இருசக்கர வாகனம் மோதியதில் சம்பவ இடத்திலேயே 2 கல்லூரி மாணவர்கள் உயிரிழந்த சம்பவமானது கன்னியாகுமரியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் வாழோடு எனும் பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் விஷால் என்பவர் வசித்துவருகிறார். இவருடைய வயது 20. இவர் மதுரையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் விஷுவல் கம்யூனிகேஷன் படித்து வந்தார். விடுமுறைக்காக தனது சொந்த ஊரான வாழோடுக்கு வந்தார்.
இவருடைய நண்பனின் பெயர் விபின். நாகர்கோவிலில் உள்ள தனியார் கல்லூரியில் இவர் 2-ஆம் ஆண்டு பயின்று வந்தார். இருவரும் நேற்று இரவு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர்.
கன்னியாகுமரியில் உள்ள திங்கள்சந்தை என்ற இடத்திற்கு சென்றனர். அங்கிருந்து அழகியமண்டபம் சாலையின் வழியே நேற்று வீடு திரும்பிக்கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராவிதமாக இருசக்கர வாகனம் நிலை தடுமாறியது. நிலைதடுமாறிய வாகனமானது சாலை ஓரத்தில் அமைந்திருந்த கல்லின் மீது மோதியது.
மோதிய அதிர்ச்சியில் இருசக்கர வாகனம் பறந்து அருகிலிருந்த மரத்தின் மீது மோதியுள்ளது. படுகாயமடைந்த இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
சம்பவம் அறிந்து விரைந்து வந்த இரணியல் காவல்துறையினர் இருவரது உடலையும் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவமானது கன்னியாகுமரியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

No comments:
Post a Comment