
இருசக்கர வாகனத்தில் சென்றதை தட்டிக்கேட்ட 2 பேர் அரிவாளால் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவமானது தூத்துக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் சிவந்தாகுளம் எனும் இடம் அமைந்துள்ளது. இங்கு வசித்து வரும் முருகேசன் கப்பல் மெக்கானிக்காக பணியாற்றி வருகிறார். இவருடைய நண்பர் விவேக். இருவரும் திருச்செந்தூர் முருகன் கோவில் பிரதான சாலையில் நின்று பேசிக்கொண்டிருந்தனர்.
அப்போது அந்த வழியில் மணி, மாரி ஆகிய இருவர் இருசக்கர வாகனத்தில் வேகமாக சென்றுள்ளனர். அவர்கள் பொதுமக்களுக்கு சேதம் விளைவிக்கும் வகையில் சென்றதால் முருகேசனும், விவேக்கும் தட்டிக்கேட்டுள்ளனர்.
இதனால் ஆத்திரமடைந்த இருவரும் தங்களுடைய கூட்டாளிகளை அழைத்து வந்துள்ளனர். வாக்குவாதம் நடந்த சில நிமிடங்களிலேயே முருகேசனையும், விவேக்கையும் அரிவாளால் வெட்டி கொலை செய்தனர்.
பலத்த காயங்களுடன் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் இருவரது உடலையும் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். உடனடியாக கொலை செய்த 6 பேரும் தலைமறைவாகிவிட்டனர்.
மேலும் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மணி, மாரி உட்பட 4 குற்றவாளிகளை வலைவீசி தேடி வருகின்றனர்.
இந்த சம்பவமானது தூத்துக்குடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் கொலையில் சம்பந்தப்பட்ட மணி என்பவர் மீது ஏற்கனவே பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. அவர் ஜாமீனில் மட்டுமே வெளியில் தெரிந்தது அவர் தகவல்கள் வெளியாகியுள்ளன.
No comments:
Post a Comment