
பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் கர்நாடக முன்னாள் அமைச்சர் டி.கே.சிவக்குமார் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 4 நாட்களாக டி.கே.சிவக்குமாரிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வந்த நிலையில் இன்று அவரை கைது செய்துள்ளது.கநாடக முன்னாள் அமைச்சரும், மூத்த காங்கிரஸ் தலைவருமான டி.கே.சிவக்குமாருக்கு சொந்தமான வீடு மற்றும் அலுவலகங்களில் கடந்த ஆண்டு வருமான வரி சோதனை நடைபெற்றது. அப்போது, கணக்கில் காட்டப்படாத ரூ. 8.59 கோடி ரொக்கப் பணம் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்பட்டது. இதனையடுத்து வருமான வரித்துறையினரின் பரிந்துரையின் பேரின் டி.கே.சிவக்குமார் மீது பணமோசடி வழக்கை அமலாக்கத்துறை பதிவு செய்தது குறிப்பிடத்தக்கது.
கர்நாடகாவில் காங்கிரஸ்- மதச்சார்பற்ற ஜனநாயக கூட்டணி ஆட்சிக்கு நெருக்கடி ஏற்பட்டபோது எம்எல்ஏக்களை தக்க வைக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டவர் டி.கே.சிவக்குமார் ஆவார்.
No comments:
Post a Comment