
கொழும்பு: கல்விக்கு அதிக முக்கியத்துவம்... முன்பள்ளி கல்விக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து, புதிய புரட்சியை நிச்சயம் ஏற்படுத்துவேன் என அமைச்சர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.
களுத்துறையில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். சஜித் மேலும் கூறியுள்ளதாவது, "ஜனாதிபதி தேர்தல்களில் முன்பள்ளி கல்விக்கு பெரும் மதிப்பு உண்டு. வேட்பாளர்கள் முன்பள்ளி கல்விவை வைத்தே தேர்தல் பிரசாரங்களில் ஈடுபடுகின்றனர்.
அண்மையில் ஜனாதிபதித் தேர்தலில் முன்வைக்கப்பட்ட கொள்கை அறிக்கைகளைப் படியுங்கள். அதில் முன்பள்ளி கல்விக்கு தனி அத்தியாயம் வகுக்கப்பட்டுள்ளமையை அவதானிக்க கூடியதாக இருக்கும். பெரும்பாலும் முன்பள்ளியை மேன்மையடைய செய்வதாக பல்வேறு வாக்குறுகளை தேர்தலில் போட்டியிடுபவர்கள் வழங்குவார்கள்.
ஆனால் வெற்றியடைந்தவுடன், அளித்த வாக்குறுதிகள் அனைத்தையும் மறந்து விடுவார்கள். முன்பள்ளி கல்வி பற்றி உண்மையாக அக்கறை கொள்பவர்கள் என்று எவருமில்லை. அந்தவகையில் என்னிடம் ஒரு திட்டம் உள்ளது. பெற்றோர்களிடமிருந்து பணம் பெறாமல் கல்வியைத் தொடங்க வேண்டும் என்பதாகும்.
ஆகையால் எனது எதிர்கால அரசியல் புரட்சியில் முன்பள்ளி கல்விக்கு தனிப்பட்ட முறையில் முக்கியத்துவம் கொடுப்பேன் என உறுதியளிக்கின்றேன்" என குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment