
பெங்களூரு: 'சந்திராயன் - 2' சுற்றுவட்டப்பாதை இறுதி முறையாக மாற்றி அமைக்கப்பட்டதால், நிலவின் அருகில் சென்றுள்ளது.'சந்திராயன் - 2' விண்கலம் கடந்த ஜூலை 22ம் தேதி பிற்பகல் 2.45 மணிக்கு விண்ணில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது. இந்த விண்கலம், நிலவின் தென்துருவத்தில் தரையிறங்கி ஆய்வு செய்ய உள்ளது. கடந்த ஆக.,3 மற்றும் ஆக.,23ம் தேதிகளில், நிலவின் பல்வேறு பகுதிகளை புகைப்படங்கள் எடுத்து பூமிக்கு அனுப்பியது.இந்நிலையில் 'சந்திராயன் - 2' விண்கலத்தின், நிலவின் சுற்றுவட்ட பாதை, ஏற்கனவே 4 முறை மாற்றி அமைக்கப்பட்ட நிலையில், தற்போது, 5வது மற்றும் இறுதி முறையாக, இன்று(செப்.,1) மாலை 6:21 மணிக்கு சுற்றுவட்டப்பாதை வெற்றிகரமாக மாற்றி
அமைக்கப்பட்டது. இதனையடுத்து நிலவின் மிக அருகில் 'சந்திராயன்- 2' சென்றுள்ளது.
No comments:
Post a Comment