
மெக்சிகோ: ரோலர் கோஸ்டர் விபத்து... மெக்சிகோவில் பொழுதுபோக்கு பூங்கா ஒன்றில் ரோலர் கோஸ்டர் விபத்துக்குள்ளானதில் 2 பேர் உயிரிழந்தனர்.
லா ஃபெரியா பொழுதுபோக்கு பூங்காவில் ரோலர் கோஸ்டரின் ஒரு பகுதி தண்டவாளத்தில் இருந்து விலகியதால், அதில் பயணம் செய்தவர்கள் கீழே தவறி விழுந்ததாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
ரோலர் கோஸ்டரில் இருந்து தவறி விழுந்தவர்கள், இரும்பு கம்பியில் மோதி படுகாயம் அடைந்ததில் 2 ஆண்கள் உயிரிழந்தனர்.
மேலும் 2 பெண்கள் உள்பட 5 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து பொழுதுபோக்கு பூங்காவில் இருந்தவர்களை வெளியேற்றிவிட்டு விபத்து குறித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
No comments:
Post a Comment