Latest News

  

வேலை... வேலை... வேலை... ரூ.1,80 லட்சம் சம்பளத்தில் பவர் கிரிட் நிறுவனத்தில் வேலை

மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான பவர் கிரிட் என அழைக்கப்படும் பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் (PGCIL) நிறுவனத்தில் காலியாக உள்ள எக்ஸ்கியூட்டிவ் டிரெய்னிஸ் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியான பொறியியல் பட்டதாரி இளைஞர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Executive Trainee (25வது பிரிவு)
தகுதி: பொறியியல் துறையில் Electrical, Electrical (Power), Electrical and Electronics, Power Systems Engineering, Power Engineering (Electrical) போன்ற பிரிவுகளில் பிஇ அல்லது பி.டெக், பி.எஸ்சி முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
வயது வரம்பு: 31.12.2019 தேதியின்படி 28 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ. 60,000 - ரூ.1,80,000 வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை: www.powergridindia.com என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: கேட் 2020 தேர்வில் பெற்றப்படும் மதிப்பெண்கள், குழு கலந்துரையாடல் மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி விண்ணப்பதாரர்கள் ரூ.500, மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் கட்டணம் செலுத்தவிதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.powergridindia.com அல்லது https://www.powergridindia.com/sites/default/files/Detailed%20Advt_ET%2025%20Advt_1.pdf?download=1 என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 15.02.2020

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceTemplateism Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.