
டெல்லி: ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் தாக்கல் செய்துள்ள ஜாமீன் மற்றும் முன் ஜாமீன் மனுக்கள் மீது தற்போது விசாரணை நடந்து வருகிறது.
முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் கைது செய்யப்பட்டார். அவர் கைது செய்யப்பட்டு இன்றோடு 9 நாட்கள் முடிய போகிறது. இந்த நிலையில் அமலாக்கத்துறை வழக்கில் முன் ஜாமீன் கேட்டும், சிபிஐ வழக்கில் ஜாமீன் கேட்டும் ப. சிதம்பரம் மனுதாக்கல் செய்துள்ளார்.
இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது.ப.சிதம்பரம் சார்பாக மூத்த வழக்கறிஞர் கபில் சிபில் மற்றும் வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி ஆகியோர் வாதம் ஏற்கனவே முடிந்துவிட்டது. ப. சிதம்பரத்திற்கு எதிராக சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை வாதம் தற்போது நடந்து வருகிறது.உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஆர். பானுமதி, போபன்னா ஆகியோர் வழக்கை விசாரித்து வருகிறார்கள் .
source: oneindia.com
No comments:
Post a Comment