
மாற்றி அமைக்கப்பட்ட கமல் கட்சியின் நிர்வாகிகள் அமைப்பில் புதிதாக இளம் பெண் தொழில் அதிபர் ஒருவருக்கு முக்கிய பதவி கொடுக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற தேர்தலில் வென்ற பிறகு அரசியல் ரீதியான நடவடிக்கைகளை கமல் குறைத்துக் கொண்டிருந்தார். இந்த நிலையில் திடீரென நிர்வாகிகள் நியமனம், கட்சி கட்டமைப்பு மாற்றம் என கமல் மீண்டும் அரசியலில் பிசியாக ஆரம்பித்துள்ளார்.
இதுநாள் வரை மக்கள் நீதி மய்யம் என்றால் பொதுச் செயலாளர் அருணாச்சலம் மற்றும் துணைத் தலைவர் மகேந்திரன் ஆகியோர் தான் அதிகாரம் பொருந்தியவர்களாக இருந்தனர். இவர்கள் மீது ஏராளமான புகார்களும் எழுந்தன. மேலும் நிர்வாகிகள் இவர்களை எளிதில் அணுக முடியவில்லை என்றும் கூறப்பட்டது.
இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்த பிறகு தமிழகம் முழுவதும் கமல் சுற்றுப் பயணம் மேற்கொண்டு கட்சியை வலுப்படுத்த முடிவு செய்துள்ளார். இதற்கான ஏற்பாடுகள் தற்போது தொடங்கியுள்ளது. அதன்படி, அருணாச்சல்ம் வகித்து வந்த பொதுச் செயலாளர் பதவி நான்கு பேரிடம் பகிர்ந்து கொடுக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் சார்பு அணிகளின் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளவர் தான் உமா தேவி. வெறும் உமா தேவி என்றால் இவரை தெரியாது. ஜெயவிலாஸ் உமாதேவி என்றால் தென் மாவட்டங்களில் பிரபலம்.
தென் மாவட்டங்களில் மிகப் பிரபலமான பேருந்து நிறுவனத்தை ஜெயவிலாஸ் குடும்பம் நடத்தி வந்தது. அந்த வகையில் விருதுநகர் மாவட்டத்தில் உமாதேவி குடும்பம் செல்வாக்கு வாய்ந்தது.
கல்லூரியில் ஹோம் சயின்ஸ் படித்தாலும் தற்போது குடும்ப பிசினசான ஜெயவிலாஸ் நிறுவனத்தை நடத்தி வருபவர் உமா தேவி தான். இளம் தொழில் முனைவோர் பள்ளியின் உறுப்பினராகவும் உமாதேவி இருக்கிறார். ஏற்றுமதி ஊக்க மையத்திலும் இவர் உறுப்பினர்.
பசையுள்ள பார்ட்டி என்று கூறப்படும் உமா தேவி கமல் கட்சியில் அண்மையில் தான் இணைந்ததாக சொல்கிறார்கள். இவர் இளம் வயது முதலே கமலின் ரசிகை என்றும் கூறுகிறார்கள். நாடாளுமன்ற தேர்தலில் ஏற்பட்ட நம்பிக்கை உமாதேவியை கட்சியில் சேர வைத்துள்ளது.

No comments:
Post a Comment