Latest News

ஏடிஎம்களில் இனி இஷ்டம் போல் பேலன்ஸ் செக் பண்ணலாம்! கட்டணத்தை ரத்து செய்தது மோடி அரசு!

கீழ்க்கண்ட இந்த ஏடிஎம் பரிவர்த்தனைகளுக்கு வங்கிகள் இனி கட்டணம் வசூலிக்க கூடாது என இந்திய ரிசர்வ் வங்கி சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

நாட்டில் சுமார் 2 லட்சம் ஏடிஎம்கள் உள்ளதாகவும். 2019 ஏப்ரல் மாதத்தில் ஒட்டுமொத்த பரிவர்த்தனைகளை ஆய்வு செய்ததில்.ஏடிஎம்கள் மூலமாக 80.9 கோடி முறை பரிவர்த்தனைகள் நடைபெற்றதாகவும். நாடு முழுவதும் சுமார் 88.47 கோடி ஏடிஎம் கார்டுகளும். 4.8 கோடி கிரெடிட் கார்டுகளும் பயன்பாட்டில் உள்ளன என்றும். இந்தியாவில் தானியங்கி காசாளும் இயந்திரங்களின் (ஏடிஎம்) பயன்பாடு கணிசமாக வளர்ந்து வருகிறதாகவும் தெரிவிக்கிறது ஆர்பிஐ.

அதன்படி இலவச ஏடிஎம் பரிவர்த்தனைகுக்கான விதிமுறைகள் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் ஏடிஎம் சேவைகள் பற்றி புதிய விதிமுறைகளை அறிவித்துள்ளது இந்திய ரிசர்வ் வங்கி. இந்தியாவில் உள்ள அனைத்து பெரிய வங்கிகளும் ஒவ்வொரு மாதமும் தங்கள் சொந்த ஏடிஎம்களில் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான இலவச பரிவர்த்தனைகளை அனுமதிக்கின்றன.

அதையும் தாண்டி அவர்கள் உபயோகப்படுத்தும் பட்சத்தில், கட்டணங்களை விதிக்கிறது அந்தந்த வங்கிகள். கடந்த ஜுன்11ம் தேதி ஏடிஎம் பரிமாற்றக் கட்டணக் கட்டமைப்பை மறு ஆய்வு செய்ய. அன்று ஆறு பேர் கொண்ட குழுவை அமைத்தது RBI. அந்த குழு சமர்ப்பித்த முடிவுகளை ஆராய்ந்து, ஆகஸ்ட் 14ம் தேதி வங்கிகளுக்கான புதிய விதிமுறைகளை அறிவித்துள்ளது ரிசர்வ் வங்கி.

அதன்படி, இனிமேல் வங்கி கணக்கில் உள்ள பணம் இருப்பு விசாரணை, காசோலை புத்தக கோரிக்கை, வரி செலுத்துதல். நிதி பரிமாற்றம் போன்ற ஏடிஎம் பரிவர்த்தனைகளுக்கு வங்கிகள் கட்டணம் வசூலிக்க முடியாது. இன்டர்நெட் மற்றும் தகவல்தொடர்பு சிக்கல்கள் போன்ற தொழில்நுட்ப காரணங்களால் தோல்வியுற்ற பரிவர்த்தனைகள் இனி ஏடிஎம் பரிவர்த்தனைகளாக கணக்கிடப்பட மாட்டாது .

ஏடிஎம்மில் பணம் இல்லை என்று வந்ததாலும், அல்லது குறிப்பிட்ட மதிப்பிலான பணம் தான் உள்ளதாக தோல்வியடையும் பரிவர்த்தனைகள் சரியான ஏடிஎம் பரிவர்த்தனைகளாக கருதப்படாது. தவறான ஏடிஎம் ரகசிய எண் பதிவு செய்தல் கணக்கு சரிபார்ப்பு போன்றவை ஏடிஎம் பரிவர்த்தனைகளாக கணக்கிடப்படாது.

இனிமேல் மேற்கண்ட காரணங்களுக்காக நீங்கள் பயன்படுத்தும் ஏடிஎம் காடுகளுக்கு உங்கள் வங்கி கணக்கில் இருந்து பிடித்தம் செய்யப்பட்டால். இந்திய ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதலின்படி, கட்டணம் வசூலிக்கும் அந்த வங்கியின் மீது புகார் அளித்து அவர்களால் பிடித்தம் செய்யப்பட்ட தொகையை திரும்ப உங்களிடமே கொடுக்க முகாந்திரம் உள்ளது.

ஏற்கனவே நாடு முழுவதும் உள்ள பல வங்கிகள். மாதத்திற்கு 4 இலவச ஏடிஎம் பரிவர்த்தனைகளும், அதற்குமேல் ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் குறைந்தபட்சம் 20 ரூபாய் என்று வசூலித்து கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது. தற்போது, ​​ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி ஒரு மாதத்தில் முதல் மூன்று பரிவர்த்தனைகளை (நிதி மற்றும் நிதி அல்லாதவை உட்பட) ஆறு மெட்ரோ இடங்களில் இலவசமாக வழங்குகிறது.

அதன்பிறகு, நிதி பரிவர்த்தனைக்கு ரூ .20 மற்றும் நிதி அல்லாத பரிவர்த்தனைக்கு ரூ. 8.50. என கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதேபோல், ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா மெட்ரோ மற்றும் மெட்ரோ அல்லாத இரு இடங்களிலும் ஒரே எண்ணிக்கையிலான 8 இலவச பரிவர்த்தனைகளை வழங்குகிறது. இலவச பரிவர்த்தனைகள் முடிந்த பின்னர் நிதி பரிவர்த்தனைக்கு ரூ .20 மற்றும் ஜி.எஸ்.டி. நிதி அல்லாத பரிவர்த்தனைக்கு ரூ .8 மற்றும் ஜி.எஸ்.டி என வசூலிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.