
ஏற்றுக்கொள்ளாத உறவினர்களின் முன்னர் ஆடிட்டராக வளர வேண்டும் என்று திருநங்கையொருவர் சபதமிட்டிருப்பது அனைவர் மத்தியிலும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் பிறந்தவர் திவாகரன். இவருக்கு மொத்தம் 2 சகோதரிகள். சிறுவயதிலிருந்தே சகோதரிகள் மற்றும் தோழிகளுடனே அதிக நேரத்தை செலவழிப்பதால் திவாகரன் கொஞ்சம் கொஞ்சமாக பெண்மை ஏற்பட தொடங்கியது. அப்போதிலிருந்தே அதிக அளவில் பெண்களுடன் விளையாடுவதையே திவாகரன் விரும்பியுள்ளார்.
வெளி உலகத்திற்கு தான் ஒரு திருநங்கை என்பதை வெளிப்படுத்தாமல் இருப்பதற்கு மிகவும் சிரமப்பட்டு உள்ளார். மேலும் வீட்டில் தான் ஒரு பெண் என்று கூறினால் அது தனது அக்காவின் திருமண வாழ்க்கையை பாதிக்க நேரிடும் என்று எண்ணி வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்.
கன்னியாகுமரிக்கு சென்று அவரை திருநங்கை ஒருவர் பத்திரமாக பார்த்து கொண்டுள்ளார். ஆனாலும் அங்கு திருநங்கைகள் பாலியல் தொழிலில் ஈடுபடுவது வழக்கம் என்பதால் மீண்டும் தன் ஊருக்கு சென்றுள்ளார். ஆனால் அவர் ஒரு திருநங்கை என்பதால் ஊர் மக்கள் அவரை ஏற்றுக்கொள்ளவில்லை. இந்நிலையில் மீண்டும் தன் ஊரை விட்டு வெளியேறினார்.
அப்போது அவருக்கு நல்ல முறையில் கவுன்சிலிங் அளிக்கப்பட்டு வந்தது. அங்கு அவருக்கு முதல் காதலும் ஏற்பட்டுள்ளது. ஆனால் அது அவருடைய நினைவில் பெரிதாக தங்கவில்லை. மேலும் தான் ஆடிட்டராக வேண்டும் என்ற வைராக்கியத்துடன் அவர் படித்து வருகிறார்.
சி.ஏ இண்டர் தேர்வுக்காக அவர் தற்போது பயிற்சி எடுத்து வருகிறார். திருநங்கையாக படித்து முயன்று சி.ஏ. வாக தேர்ச்சி பெற வேண்டும் என்ற வைராக்கியத்துடன் அவர் செயல்பட்டு வருகிறார்.
தான் ஒரு திருநங்கையாக பிறந்து விட்டோம் என்பதை நினைத்து வருந்தாமல், படித்த சாதித்து காட்ட வேண்டும் என்ற எண்ணமுடைய திவாகரனுக்கு தமிழக அரசு உதவி செய்ய முன் வரவேண்டும்.

No comments:
Post a Comment