Latest News

பள்ளி கழிவறையில் வைத்து பூட்டப்பட்ட மாணவன் உயிரிழப்பு - போலீசார் விசாரணை

திருப்பதி:
ஆந்திர மாநிலம் புங்கனூரை சேர்ந்தவர் ரெட்டியப்பா இவரது மனைவி நந்தினி. இவர்களின் மகன் ஹர்‌ஷவர்தன் (வயது 6). ஈஸ்ட்பேட்டை நகராட்சி பள்ளியில் 1-ம் வகுப்பு படித்து வந்தான். சம்பவத்தன்று பள்ளியில் சக நண்பர்களுடன் விளையாட்டு மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்தான்.

அப்போது விளையாட்டாக சக மாணவர்கள் ஹர்‌ஷவர்தனை பள்ளி கழிவறையில் வைத்து தாழ்ப்பாள் போட்டு பூட்டி விட்டு வகுப்பறைக்கு சென்று விட்டனர். கழிவறையில் இருட்டாக இருந்ததால் பயத்தில் தவித்த ஹர்‌ஷவர்தன் கத்தி கதறி அழுதான்.

அந்த வழியாக வந்தவர்கள் சத்தம் கேட்டு ஹர்‌ஷவர்தனை மீட்டு பள்ளி ஆசிரியையிடம் ஒப்படைத்தனர். இதில் பயந்துபோன ஹர்‌ஷவர்தனுக்கு திடீரென காய்ச்சல் ஏற்பட்டது.அவரது பெற்றோர்கள் சிகிச்சைக்காக புங்கனூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே மாணவன் ஹர்‌ஷவர்தன் பரிதாபமாக இறந்தான்.

இதுகுறித்து புங்கனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பணியில் கவனக்குறைவாக இருந்த வகுப்பு ஆசிரியையை போலீசார் எச்சரிக்கை செய்தனர். மேலும் சக மாணவர்களிடம் விசாரணை நடத்தினர். மேலும் இதுபோன்று சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போலீசார் அறிவுறுத்தினர்.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.