
மஹோபா:
உத்தர பிரதேச மாநிலத்தின் மஹோபா மாவட்டத்தில் உள்ளது ராயன்பூர். அப்பகுதியில் உள்ள ஒரு வீட்டில் தயாசங்கர், ஜெய்ஹிந்த், ஹரிஷ் என்கிற மூவர் வெல்டிங் கடை நடத்தி வந்துள்ளனர். ஆனால் அவர்களது நடவடிக்கைகள் பொது மக்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தின.
இந்நிலையில், அவர்கள் சட்ட விரோதமாக ஆயுதங்கள் தயாரிப்பில் ஈடுபட்டு வருவதாக போலீசாருக்கு நேற்றிரவு தகவல் கிடைத்தது. உடனே போலீசார் அங்கு சென்று சோதனையில் ஈடுபட்டனர். அங்கிருந்து ஆயுதங்கள் தயாரிப்பதற்கான மூலப்பொருட்களும் அதிக அளவில் கைப்பற்றினர். இதையடுத்து தொழிற்சாலை மூடப்பட்டு அவர்கள் கைது செய்யப்பட்டனர்.

No comments:
Post a Comment