
வேலூர்: வேலூர் மக்களவை தொகுதியில் திமுக வேட்பாளர் கதிர்ஆனந்தை ஆதரித்து உதயநிதி ஸ்டாலின் 3 நாட்கள் பிரசாரம் செய்ய உள்ளார்.
திமுக இளைஞரணி செயலாளராக பதவியேற்ற பிறகு, வேலூர் மக்களவைத் தேர்தலில் உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட உள்ளார். இதனால், என்ன பேசுவார் என்ற எதிர்பார்ப்பில் அக்கட்சியின் தொண்டர்கள் உள்ளனர்.
வருகிற 29ஆம் தேதி காலை வாணியம்பாடி சட்டமன்ற தொகுதியில் பிரசாரத்தை தொடங்கும் உதயநிதி ஸ்டாலின் மாலையில் ஆம்பூரில் வாக்கு சேகரிக்கிறார். 30ஆம் தேதி காலை குடியாத்தத்திலும் மாலை கே.வி.குப்பம் சட்டமன்ற தொகுதியிலும் கதிர்ஆனந்தை ஆதரித்து பிரசாரம் செய்கிறார்.
தொடர்ந்து 31ஆம் தேதி காலை அணைக்கட்டு சட்டமன்ற தொகுதியில் பிரசாரம் செய்யும் உதயநிதி ஸ்டாலின் மாலையில் வேலூரில் தனது பிரசாரத்தை நிறைவு செய்கிறார்.
அதே சமயம், வேலூர் மக்களவை தேர்தலில், தி.மு.க. வேட்பாளர் கதிர் ஆனந்த்தை ஆதரித்து 2 கட்டங்களாக தி.மு.க. தலைவர் ஸ்டாலின் பிரசாரம் செய்கிறார். முதல்கட்டமாக 27, 28, 29 ஆகிய மூன்று நாட்கள் பிரசாரம் செய்கிறார். இதனையடுத்து, ஆகஸ்ட் மாதம் 1,2,3 ஆகிய மூன்று நாட்கள் அவர் பிரசாரம் மேற்கொள்ள உள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், வேலூர் உழவர் சந்தை பகுதியில் வேட்பாளர் கதிர் ஆனந்தை ஆதரித்து, திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், நடை பயணமாக சென்று பொதுமக்களிடம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். தொரப்பாடி உழவர் சந்தையில் சிறு, குறு வியாபாரிகள் மற்றும் பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார்.
source: oneindia.com
No comments:
Post a Comment