
நிலம் கையகப்படுத்துதல் தொடர்பாக 2015ல் தமிழக அரசு கொண்டுவந்த சட்டம் ரத்து செய்யப் படுவதாக சென்னை உயர் நீதிமன்றம் கூறியுள்ளது.
மக்களிடம் கருத்து கேட்காமல் நிலங்களை கையகப்படுத்தும் வகையில் சட்டம் இருப்பதாக தொடரப்பட்ட வழக்கில் அதிரடி தீர்ப்பு வழங்கியது.
நிலம் கையகப்படுத்தல் தொடர்பாக கடந்த 2015 ஆம் ஆண்டு தமிழக அரசு கொண்டு வந்த சட்டம் ரத்து செய்யப் படுவதாக அது கூறியது.
நில கையகப்படுத்தும் மாநில நெடுஞ்சாலைகள் சட்டம், தொழில் பயன்பாட்டிற்கான நிலம் கையகப்படுத்தும் சட்டம் - ஹரிஜன் நல சட்டம் ஆகிய சட்டங்களை பாதுகாக்க புதிய சட்டத்தை தமிழகஅரசு கொண்டு வந்தது.
சட்டத்தை எதிர்த்து ராமநாதபுரத்தை சேர்ந்த கருணாநிதி உட்பட 100'க்கும் மேற்பட்ட விவசாயிகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப் பட்டது. இந்த புதிய சட்டத்தால் கருத்து கேட்பு கூட்டம் நடத்தாமலேயே தமிழக அரசு நிலம் கையகப்படுத்தி வருகிறது என்று மனுதாரர்கள் தரப்பு புகார் கூறியது.
சட்டத்தை ரத்து செய்தால் சுமார் 80 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான உள்கட்டமைப்பு திட்டங்கள் பாதிக்கப்படும் என்று தமிழக அரசு கூறியது. ஆயினும், விவசாயிகளின் வாதங்களை ஏற்று சென்னை உயர் நீதிமன்றம் மேற்கண்ட பரபரப்பு தீர்ப்பினை அளித்தது.

No comments:
Post a Comment