
கும்பகோணம் அருகே பாபநாசத்தில் வீட்டின் கதவை உடைத்து 15 சவரன் நகை மற்றும் 5 ரூபாய் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கும்பகோணத்தை அடுத்த பாபநாசம் அருகே கஞ்சிமேடு பகுதியைச் சேர்ந்தவர் வேலு. இவர் பாபநாசம் கடைவீதியில் பாத்திரக்கடை வைத்துள்ளார். இந்நிலையில் நேற்று இரவு வேலு வீட்டைப் பூட்டி விட்டு மனைவியை அழைத்துக் கொண்டு தனது கடைக்கு சென்றிருந்தார்.
வீட்டில் யாரும் இல்லாததை நோட்டமிட்ட மர்ம நபர்கள் வீட்டின் பின் பக்க கதவின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பீரோவில் இருந்த 15 சவரன் நகை மற்றும் 5 ஆயிரம் ரூபாயை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
பின்னர் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் மோப்ப நாய் உதவியுடன் தடயங்களை சேகரித்தனர். இந்த கொள்ளை சம்பவம் குறித்து பாபநாசம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
newstm.in

No comments:
Post a Comment