
சென்னை: தமிழகத்தில் நடந்து முடிந்த 22
சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் குறித்து இந்தியா டுடே நடத்திய
தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் வெளியாகியுள்ளன.
அதில்,
தமிழகத்தில் அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் உட்பட 22 தொகுதிகளுக்கு
நடந்த இடைத் தேர்தலில் அதிமுக 3 இடங்களில் வெற்றி பெறும்.
14 தொகுதிகளில் திமுக வெற்றி பெறும் எனவும், 5 தொகுதிகளில் கடுமையான போட்டி இருக்குமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மே
23ம் தேதி வாக்குகளை எண்ணும் பணி நடைபெற உள்ள நிலையில், இறுதி கட்ட
வாக்குப்பதிவு முடிந்த நொடி முதல் பல்வேறு ஊடகங்களின் தேர்தலுக்குப்
பிந்தைய கருத்துக் கணிப்புகள் தொடர்ந்து வெளியாகிக் கொண்டே இருக்கிறது.
தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்
கணிப்புகள் தேர்தல் முடிவுகளை ஒட்டி அமையுமா? தலைகீழ் மாற்றமாக முடியுமா?
பொறுத்திருந்து பார்ப்போம்..
No comments:
Post a Comment