
இந்தியாவின் முன்னாள் குடியரசு தலைவர் பிரனாப் முகர்ஜி மின்னணு
வாக்குப்பதிவு இயந்திரங்களில் (இவிஎம்) மோசடிகள் நடைபெறுவதாக வெளியாகும்
செய்திகளால் கவலை அடைந்துள்ளதாக தெரிவித்திருகிறார்.
"இது
வாக்காளர்களின் தீர்ப்பை சேதப்படுத்துகின்ற நடவடிக்கை" என்று கூறியுள்ள
பிரணாப் முகர்ஜி, "அமைப்பின் நேர்மையை உறுதி செய்கின்ற பொறுப்பு தேர்தல்
ஆணையத்தை சேர்ந்தது" என்று கூறியுள்ளார்.
மேலும், "தேர்தல்
ஆணையத்தின் பொறுப்பிலுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு
பாதுகாப்பு வழங்க வேண்டியது தேர்தல் ஆணையத்தின் கடமை" என்றும் அவர்
தெரிவித்துள்ளார்.
உத்தர பிரதேசம்,
பிகார், பஞ்சாப் மற்றும் ஹரியானா மின்னணு நடைபெறுவதாக வெளியாகும் தொடர்
காணொளி பதிவுகள், வாக்குப்பதிவு இயந்திரங்களின் மோசடிகள் நடைபெறுவதை உறுதி
படுத்துகின்றன என்று எதிர்க்கட்சிகள் கூறுகின்ற நிலையில், முன்னாள்
குடியரசு தலைவரின் இந்த கூற்று வந்துள்ளது.
"ஜனநாயகத்தின் அடிப்படையை சவாலுக்குட்படுத்தும்
எந்தவொரு அனுமானங்களுக்கும் இடமளிக்கக்கூடாது. மக்களின் தீர்ப்பு
புனிதமானது. இதில் எவ்வித ஐயமும் ஏற்படாமல் பார்த்துகொள்ள வேண்டும்" என்று
முகர்ஜி தெரிவித்துள்ளார்.
இந்திய தேர்தல் ஆணையத்தின் முதல் தலைமை
தேர்தல் ஆணையர் சுகுமார் சென் தொடங்கி, இன்றைய தலைமை தேர்தல் ஆணையர் வரை
அனைவரின் செயல்பாடுகளையும் பிரனாப் முகர்ஜி புகழ்ந்து பேசிய மறுநாள் இந்த
கருத்து வந்துள்ளது.
No comments:
Post a Comment