இந்நிலையில் இத்தொகுதியில் வேலூர் தொகுதியில் மக்களவைத் தேர்தலை ரத்து
செய்ய வேண்டுமென கடந்த 14 ஆம் தேதி ஜனாபதிக்கு பரிந்துரை செய்யப்பட்டது.
இந்தப் பரிந்துரையை ஏற்று இன்று ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வேலூர்
தொகுதியில் மக்களவை தேர்தலை ரத்து செய்ய ஒப்புதல் அளித்துவிட்டார். ஆனால்
ஆம்பூர், குடியாத்தத்தில் இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம்
அறிவித்துள்ளது. இந்நிலையில் இதுகுறித்து துரைமுருகன் செய்தியாளர்களுக்கு
கூறியதாவது : மோடி அரசை முடிவுக்கு கொண்டு வரும் தேர்தலாக இந்த தேர்தல்
அமைய வேண்டும்.வேலூர் தொகுதியில் தேர்தல் ரத்து என்பது ஜனநாயக படுகொலை
என்று தெரிவித்தார்.

No comments:
Post a Comment