
சென்னை: "எதையுமே நம்பாதீங்க.. நான் எப்பவுமே திமுக விசுவாசிதான்..
நான் எப்பவுமே உங்க அபிமானிதான்" என்று சொல்லும் ரேஞ்சுக்கு கனிமொழி
தலையில் ஐஸ்.. ஸாரி.. பூவை கொட்டி வரவேற்று விட்டார் கீதா ஜீவன்!
3
வருஷமாக தூத்துக்குடி பக்கம் அடிக்கடி சென்று, மக்கள் பிரச்சனைகளை கையில்
எடுத்து அந்த தொகுதியின் மேல் கண்ணாக இருந்தவர் எம்பி கனிமொழி. ஸ்டாலினிடம்
பேசி தூத்துக்குடி தொகுதியில் சீட் வாங்கி அதற்கான வேலையிலும் இறங்கினார்.
அப்போதுதான்
எம்எல்ஏ கீதாஜீவனின் அந்த ஆடியோ இடியாய் வந்து விழுந்தது. சாதி ரீதியாக
எதையோ கீதாஜீவன் பேச போய், அது கனிமொழிக்கு எதிரானது என்று திசை
திருப்பப்பட்டது. கீதாஜீவன் பேசிய பேச்சால், கனிமொழிக்கு அதிருப்தி
ஓட்டுக்கள் விழ போகிறது என்று தகவலும் பரவ ஆரம்பித்தது.
கடைசியில், கட்சி தலைமை கீதாஜீவனை கூப்பிட்டு கடிந்து கொண்டதாகவும் சொல்லப்பட்டது.
பிரச்சாரம்
சிவப்பு நிற சேலை
சிவப்பு நிற சேலை
இந்நிலையில், தொகுதியில் பிரச்சாரம்
செய்யும்போது கனிமொழியுடன் கீதாஜீவன் இருப்பது போல ஒரு படம் வெளியாகி
உள்ளது. சிவப்பு நிற சேலை, கருப்பு துண்டு.. என கட்சி முத்திரையுடன் ஒரு
வேனில் கனிமொழி வாக்கு சேகரித்தபடியே வருகிறார். திடீரென கனிமொழி தலையில்
பூக்கள் கொட்டப்படுகிறது.
கொட்டப்பட்டது
சில்வர் குடம்
சில்வர் குடம்
பூவை கொட்டியது... கட்சி
தொண்டர்களோ, நிர்வாகிகளோ, அந்த பகுதி மக்களோ இல்லை.. பக்கத்திலேயே
நின்றுகொண்டிருந்த கீதாஜீவன்தான்! ஒரு சின்ன சில்வர் குடத்திலிருந்து
பூக்களை கனிமொழி மேல் கொட்டுகிறார்.
பூக்கள்
வெட்கத்தில் கனிமொழி
வெட்கத்தில் கனிமொழி
பூக்களை கொட்டியதும் கனிமொழி
வெட்கப்பட்டு சிரிக்கிறார். இந்த போட்டோதான் வைரலாகி வருகிறது. எப்படியோ..
இதன்மூலம் கனிமொழிக்கு எதிராக கீதாஜீவன் வாக்குகளை பிரிக்கிறார் என்ற
பேச்செல்லாம் போயே போச்சு! போயிந்தி! இட்ஸ் கான்! அதை விட முக்கியமாக
அடுத்து திமுக ஆட்சியைப் பிடித்தால் கீதா ஜீவனுக்கு கண்டிப்பாக அமைச்சர்
பதவியும் கிட்டத்தட்ட இந்த பூ மழை மூலம் உறுதியாகிவிட்டது என்றும் சொல்லிக்
கொள்கிறார்கள்.
கவலை
தமிழிசை
தமிழிசை
நமக்கு இப்ப என்ன கவலைன்னா.. இந்தப் படத்தைப்
பார்த்து தமிழிசையும் ஒரு பூமழையில் நனைந்து அதையும் போட்டோவாக வெளியிட்டு
களேபரப்படுத்தி விடுவாரோ என்பதுதான்!
No comments:
Post a Comment