கொழும்பு: தொடர் குண்டுவெடிப்புக்கு பொறுப்பேற்று பதவி விலகுமாறு
இலங்கை அதிபர் சிறிசேனா உத்தரவை ஏற்க அந்நாட்டு போலீஸ் ஐஜி
மறுத்துவிட்டார்.
இலங்கையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஈஸ்டர்
பண்டிகையின் போது 8 இடங்களில் குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. இதில் 350 பேர்
பலியாகிவிட்டனர். 500-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இதுபோன்ற
சதி வேலை நடைபெறும் உஷாராக இருங்கள் என இலங்கை போலீஸிடம் இந்தியா இருமுறை
எச்சரிக்கை விடுத்தது. இலங்கையில் குண்டுவெடிக்கப்படும் என்ற தகவலை கைது
செய்யப்பட்ட தீவிரவாதியிடம் நடத்திய விசாரணையில் இந்தியா பெற்றது.
இலங்கை அலட்சியம்
பிரதமர் ரணில்
பிரதமர் ரணில்
ஆனால் அதை இலங்கை அலட்சியம் செய்து விட்டது.
ஒரு வேளை உஷாராக இருந்திருந்தால் இதுபோன்ற உயிரிழப்புகள்
ஏற்பட்டிருக்காது. இதை பிரதமர் ரணிலே ஒப்புக் கொண்டார். எனினும் ஒரு
வாரமாகியும் இன்னும் பதற்றம் தணியவில்லை.
குண்டுவெடிப்பு
விலகல்
விலகல்
இந்த
நிலையில் இலங்கை தொடர் குண்டுவெடிப்புக்கு பொறுப்பேற்று பதவி விலக
வேண்டும் என இலங்கை பிரதமர் ரணிலை அதிபர் சிறிசேனால் கேட்டுக் கொண்டார்.
ஆனால் அவரோ இந்தியாவின் எச்சரிக்கைபடி உஷார்படுத்தப்பட்டும் இதுபோன்ற
தாக்குதல் சம்பவம் நடைபெற்றிருந்தால் மட்டுமே நான் பதவி விலகியிருப்பேன்
என்று ரணில் மறுத்துவிட்டார்.
பதவி விலகல்
மறுப்பு
மறுப்பு
இதையடுத்து
இலங்கை குண்டுவெடிப்புக்கு பொறுப்பேற்று பதவி விலகுமாறு ஐஜி புஜித்
ஜெயசுந்தராவுக்கு அதிபர் சிறிசேனா உத்தரவிட்டார். ஆனால் அவரோ பதவி விலக
மறுத்துவிட்டார்.
நாடாளுமன்ற தீர்மானம்
பிரதமர் ரணில் நியமனம்
பிரதமர் ரணில் நியமனம்
இலங்கை
அரசியல் சட்டப்படி போலீஸ் துறை தலைவரை நாடாளுமன்ற தீர்மானம் மூலம் மட்டுமே
நீக்க முடியும். இலங்கை போலீஸ் ஐஜி புஜித் அந்நாட்டு பிரதமர் ரணிலால்
நியமிக்கப்பட்டவர். பாதுகாப்பு துறை செயலாளர் பெர்னான்டோ பதவி விலகிய
நிலையில் ஐஜி பதவி விலக மறுத்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
source: oneindia.com
No comments:
Post a Comment