டோஹாவில் நடைபெற்று வரும் ஆசிய தடகளப் போட்டியில்
திருச்சி அருகேயுள்ள முடிகண்டம் கிராமத்தைச் சேர்ந்த கோமதி (30), தங்கம்
வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ளார்.
இந்நிலையில்,
ஆசிய தடகளத்தில் தங்கம் வென்ற கோமதி மாரிமுத்துவுக்கு, திருச்சி விமான
நிலையத்தில் பொன்னாடை, பூங்கொத்துகள் வழங்கி உற்சாக வரவேற்பு
ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டது. அப்போது செய்தியாளர்களிடம் கோமதி
மாரிமுத்து பேசியதாவது,
இத்தனை பாராட்டுக்கள் கிடைப்பது எனக்கு அளவற்ற மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது.
எனக்கு ஆதரவும் அதிகரித்து வருவதும் கூடுதல் மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது. நான் அணிந்திருந்த காலணி கிழிந்ததுதான்.
ஏனென்றால்
எனக்கு அதிர்ஷ்டமான காலணி என்பதால் அதைப் பயன்படுத்தினேன். இரு காலணிகளும்
வேறு வேறு நிறங்களில் இருப்பது தான் அதன் வடிவமைப்பு. என்னிடம் காலணி
இல்லை என்பது உண்மையில்லை. அதுகுறித்து தவறான புரிந்துகொள்ளப்பட்டுள்ளது
என்று தெரிவித்தார்.
No comments:
Post a Comment