
டெல்லி: பிரதமர் மோடி திருடர்தான், அவர் ரபேல் ஒப்பந்தத்தில் திருடி
விட்டார் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மீண்டும் குறிப்பிட்டு
இருக்கிறார்.
பிரதமர் மோடியை திருடர் என்று உச்ச நீதிமன்றம்
கூறியதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குறிப்பிட்டு இருந்தது பெரிய
சர்ச்சையை ஏற்படுத்தியது. ரபேல் வழக்கின் கடந்த விசாரணையின் போது ராகுல்
காந்தி செய்தியாளர் சந்திப்பில் இப்படி குறிப்பிட்டு இருந்தார்.
இதற்கு எதிராக பாஜக வழக்கு தொடுத்து. இதில் ராகுல் காந்தி தன்னுடைய விளக்கத்தை உச்ச நீதிமன்றத்தில் இன்று அளித்து இருந்தார்.
என்ன
என்ன விளக்கம்
என்ன விளக்கம்
ராகுல் காந்தி தனது விளக்கத்தில் ''நான் பேசியது தவறாக புரிந்து கொள்ளப்பட்டு இருக்கிறது.
தேர்தல் பிரச்சாரத்தின் போது ஒரு வேகத்தில் ரபேல்
விவகாரம் குறித்து அவ்வாறு பேசிவிட்டேன். உச்ச நீதிமன்றம் சொல்லாத (
மோடியையே திருடர் என்று) விஷயத்தை சொல்லிவிட்டதாக கூறியதற்கு வருத்தம்
தெரிவிக்கிறேன், என்று குறிப்பிட்டார்.
பேட்டி
பேட்டி என்ன
பேட்டி என்ன
இந்த
நிலையில் ரேபரேலியில் பிரச்சாரத்தின் போது செய்தியாளர்களை சந்தித்த ராகுல்
காந்தி, நான் இப்போதும் என் நிலைப்பாட்டில் தெளிவாக இருக்கிறேன். மோடி
திருடர்தான். நீதிமன்றம்தான் அவரை திருடர் என்று கூறவில்லை. அதற்கான
விளக்கத்தை அளித்துவிட்டேன். ஆனால் நான் என் நிலைப்பாட்டில் உறுதியாக
உள்ளேன். நான் சொல்கிறேன், அவர் திருடர்தான். அது விரைவில் நிரூபணம் ஆகும்.
சவால்
சவால் விடுகிறேன்
சவால் விடுகிறேன்
நான்
மோடிக்கு சவால் விடுகிறேன். அவரால் என்னிடம் நேருக்கு நேர் பேச முடியுமா?
ஊழல் குறித்து பேசுவோம். வெறும் 10 நிமிடம் மக்கள் முன் பேச முடியுமா?
அவருக்கு அந்த தைரியம் இருக்கிறதா? அவருக்கு பிடித்த இடத்தில் அவருக்கு
சரியான நேரத்தில் பேசலாம். அவர் வருவாரா? என்று ராகுல் காந்தி சவால்
விட்டுள்ளார்.
கோபம்
அது
மட்டுமில்லாமல் சவுக்கிதார் (காவலர்) என்று ராகுல் காந்தி கத்தி சத்தமாக
பேசினார். உடனே அங்கிருந்த காங்கிரஸ் தொண்டர்கள் சோர் ஹே ( திருடர்) என்று
சத்தமாக கத்தினார்கள். உடனே ராகுல் காந்தி நீங்களே பாருங்கள் நான்
சொல்லவில்லை. மக்களே அப்படித்தான் திருடர் சொல்கிறார்கள். விரைவில் நாடே
அப்படி சொல்லும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார்.
Dailyhunt
No comments:
Post a Comment