Latest News

பாபர் மசூதியை நான்தான் இடித்தேன்.. பாஜக வேட்பாளர் சாத்வியின் கருத்தால் சர்ச்சை.. எப்ஐஆர் பாய்கிறது!

போபால்: நான்தான் பாபர் மசூதியை இடித்தேன் என்று பாஜக வேட்பாளர் சாமியார் சாத்வி பிரக்யா தாக்குர் தெரிவித்துள்ளார். இதற்கு எதிராக தற்போது தேர்தல் ஆணையம் எப்ஐஆர் பதிய உத்தரவு பிறப்பித்துள்ளது.

மலேகான் குண்டுவெடிப்பில் குற்றஞ்சாட்டப்பவர்களில் ஒருவரான சாத்வி பிரக்யா தாக்குர் பாஜக சார்பாக போட்டியிடுகிறார். கட்சியில் இணைந்த சில நாட்களிலேயே அவருக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டு இருக்கிறது.

இது இந்தியா முழுக்க அதிர்ச்சி அலையை ஏற்படுத்தி உள்ள நிலையில் தற்போது சாத்வி பிரக்யா தாக்குர் தொடர்ந்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்து வருகிறார்.

யார்
யார் இவர்
மலேகான் குண்டுவெடிப்பில் குற்றஞ்சாட்டப்பவர்களில் ஒருவர்தான் இந்த சாத்வி பிரக்யா தாக்குர். இவர் தற்போது பாஜகவில் இணைந்துள்ளார். செப்டம்பர் 29, 2008ல் மும்பையில் மலேகான் பகுதியில் இரண்டு பைக்குகளில் வைக்கப்பட்டு இருந்த வெடிகுண்டு வெடித்தது. இந்த மோசமான சம்பவத்தில் 7 பேர் பலியானார்கள்.

பெயில்
பெயிலில்
இதில் கைது செய்யப்பட்டவர்தான் இந்து சாமியார் சாத்வி பிரக்யா தாக்குர். இவர் பெயிலில் வெளியே வந்து தற்போது பாஜக சார்பாக போபாலில் போட்டியிடுகிறார்.இவர் கடந்த வாரம் அளித்த பேட்டியில், நாங்கள்தான் பாபர் மசூதியை இடித்தோம். நான் இந்த நிகழ்வில் கலந்து கொண்டேன். நான் அதை பெருமையாக நினைக்கிறேன். பாபர் மசூதியின் மேல் ஏறி நான் அதை இடித்தேன்.

பலம்
என்ன பலம்
எனக்கு அதற்கான பலத்தை கடவுள் அளித்ததற்கு நன்றி. நாங்கள் அதே இடத்தில் ராமர் கோவிலை கட்டுவோம். நாங்கள் எல்லோரும் சேர்ந்து இந்தியாவின் கரையை உடைத்தோம் என்று சாத்வி குறிப்பிட்டு இருக்கிறார். இவரின் பேச்சை அடுத்து தேர்தல் ஆணையம் அவருக்கு நோட்டீஸ் அனுப்பியது. இந்த நோட்டீசை தொடர்ந்து தற்போது இவர் மீது எப்ஐஆர் போட உத்தரவிடப்பட்டுள்ளது. முறையாக இவர் மீது தேர்தல் ஆணையம் வழக்கு பதிய உள்ளது.

மோசம்
மிக மோசம்
தொடர்ந்து இவர் இப்படிப்பட்ட கருத்துக்களை பேசி வருவதால் தேர்தல் ஆணையம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. இதையடுத்து பாஜக மேலிடம் இவரை கவனமாக பிரச்சாரம் செய்யும்படி கூறியுள்ளது. அதன்படி, சர்ச்சைக்குரிய கருத்துக்களை அதிகம் பேசாமல் குறைத்துக் கொள்ளும்படி பாஜக கட்சி இவருக்கு அறிவுரை கூறியுள்ளது.

source: oneindia.com

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.