கமல்ஹாசனின் வீடியோவுக்கு பதில் சொல்லும் விதமாக தானும்
தங்கள் குடும்பமும் திமுக கூட்டணிக்கே ஓட்டு போட போவதாக மாணவி அனிதாவின்
அண்ணன் பேஸ்புக் பதிவில் பதிவிட்டுள்ளார்.
மக்கள்
நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் நேற்று வெளியிட்ட பிரசார வீடியோவில்
"முடிவு பண்ணிட்டீங்களா? யாருக்கு ஓட்டு போடப் போறீங்க? என்ற கேள்வியை
எழுப்பியிருந்தார். குறிப்பாக மொத்த அரசாங்கமும் சேர்ந்து நீட் தேர்வு என்ற
பெயரில் ஒரு பொண்ண கொலை செய்தார்களே அந்தப் பெண்ணோட அப்பா அம்மாகிட்ட
கேளுங்க. அவங்க சொல்வாங்க யாருக்கு போகக்கூடாது என்று. நாட்டை ஆள தகுதியே
இல்லாத இந்த நாட்டில் அதை தட்டி கேட்கிற ஒருத்தனா உங்களில் ஒருத்தனா
கேட்கிறேன்.
யாருக்கு ஓட்டு போடப் போறீங்க? என்று கேள்வி எழுப்பியிருந்தார்.
இந்நிலையில்
நீட் தேர்வினால் தற்கொலை செய்துகொண்ட மாணவி அனிதாவின் அண்ணன், தாங்கள்
யாருக்கு ஓட்டு போட போகிறோம் என்பதை தனது பேஸ்புக் பக்கத்தில்
பகிர்ந்துள்ளார். அதில்
''அன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய அண்ணன்
கமல் அவர்களின் உண்மையான ரசிகன் நான். நடிப்பிற்காக மட்டுமல்ல, திரையிலும்
நிஜத்திலும் மரபுகளை உடைக்க நினைக்கும் கலைஞன், மற்றவர்கள் என்ன நினைத்தால்
என்ன தனக்கு சரியென்று படுவதை செய்யும் துணிச்சல்காரன். ரசிகர் மன்றங்களை
கலைத்து நற்பணி மன்றங்களாக மடைமாற்றம் செய்தவன்.
அவரைப்
பார்த்துதான் 18 முறை இரத்ததானம் செய்துள்ளேன். உடல்தானம் செய்துள்ளேன்.
புதிதாக யார் அரசியலுக்கு வந்தாலும் மகிழ்ச்சிதான், அந்த வகையில் அண்ணன்
கமல் அவர்களுக்கும் மக்கள் நீதி மய்யத்திற்கும் என் வாழ்த்துகள். அண்ணன்
கமல் சொன்னது போல யாருக்கு வாக்களிக்க கூடாது என்பதில் நானும், எங்கள்
குடும்பமும் தெளிவாகவே இருக்கிறோம். பாசிச பாஜக கூட்டணிக்கு ஒருபோதும்
வாக்களிக்க கூடாது என்பதில். அனிதா இறந்த போது இதை சும்மா விடக்கூடாது எனக்
கூறிய அதே "திருமாவளவன்" தான் எங்கள் தொகுதியின் வேட்பாளர்.
மத்திய
அரசிடம் நீட் விலக்கு என்பதை நிர்பந்திக்கும் வல்லமை கொண்ட கட்சி, சமூக
நீதி நிலைநாட்டும் கட்சி, மாநில உரிமைகளை ஒருபோதும் விட்டுக்கொடுக்காத
கட்சி, தற்போதைய சூழலில் தமிழகத்தின் குறைந்தபட்ச பாதுகாப்பை உறுதி
செய்யும் ஒரே கட்சி திமுக மட்டுமே. திமுக தலைமையிலான கூட்டணி கட்சிகளின்
வலியுறுத்தலின் காரணமாக காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் நீட் விலக்கு
அறிவிக்கப்பட்டுள்ளது. எங்களுக்கு நம்பிக்கை தருவதாக உள்ளது,. ஆதலால்
எங்களின் வாக்கு திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின்
வேட்பாளர் திருமாவளவன் (தலைவர் என்ற பதத்திற்கு முழு தகுதியுடையவர்)
அவர்களுக்கே. என்றும் கமல் ரசிகன்'' என்று பதிவிட்டுள்ளார்.


No comments:
Post a Comment