Latest News

ரஜினிகாந்த் ஆர்எஸ்எஸ் கட்டுப்பாட்டில் உள்ளார்.. திருமாவளவன் கடும் விமர்சனம்

திருச்சி: நடிகர் ரஜினிகாந்த், பாஜகவின் தேர்தல் அறிக்கையை புகழ்ந்துரைத்தது குறித்து, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

சென்னையில் நிருபர்களிடம் இன்று பேசிய, ரஜினிகாந்த், பாஜக தேர்தல் அறிக்கையில் நதிநீர் இணைப்பு குறித்து, தெரிவிக்கப்பட்டுள்ளது. இது வரவேற்கத்தக்கது என்று தெரிவித்தார்.

பாஜக கூட்டணிக்கு ரஜினிகாந்த் மறைமுகமாக ஆதரவு அளித்ததாகவே இது பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், அரியலூரில் இன்று தொல்.

திருமாவளவன் நிருபர்களிடம் இதுபற்றி கூறியதாவது:
ரஜினிகாந்த் பேட்டியை பார்த்து, எனக்கு அதிர்ச்சியோ, வியப்போ இல்லை. ரஜினிகாந்த், பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் கட்டுப்பாட்டில் இயங்குவதற்கு இது மேலும் ஒரு சான்று. ரஜினிகாந்த்தின் நிலைப்பாடு மக்களிடம் வெளிப்பட்டதில் மகிழ்ச்சி. இவ்வாறு திருமாவளவன் தெரிவித்தார்.

அதேநேரம், ரஜினிகாந்த் கருத்தை வரவேற்று பெருமைப்படுகிறேன் என்று மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். நதிநீர் இணைப்பு திட்டம் என்பது, தென் மாநில மக்களுக்கு வரப்பிரசாதம் என்றார் அவர்

source: oneindia.com

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.