பெண் இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி மீது பெற்ற மகள் பரபரப்பு புகார் அளித்துள்ளார்.
சென்னை:
என்னை பார்-ல டான்ஸ் ஆட வெச்சி எங்க அம்மா, அப்பா பணம் சம்பாதிச்சாங்க..
கொடுமைப்படுத்தறாங்க.. பயமா இருக்கு.. என் உயிரை காப்பாத்துங்க" என்று
கோட்டூர்புரம் சிபிசிஐடி காவல் ஆய்வாளர் விஜயலட்சுமியின் மகள் கதறுகிறார்!
கோட்டூர்புரம்
சிபிசிஐடி இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்தவர் ஆர்.விஜயலட்சுமி. சமீபத்தில்
தேர்தல் நடந்ததால், இதற்காக இவர் இடமாற்றம் செய்யப்பட்டார்.
இந்நிலையில்,
விஜயலட்சுமி மீது ஒரு புகார் எழுந்துள்ளது. பெற்ற மகளே விஜயலட்சுமி மீது
அந்த புகாரை அளித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
குற்றச்சாட்டு
தாய் தந்தையே தன்னை
கொடுமைப்படுத்துவதாக கூறி தனக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என சிபிசிஐடி
ஆய்வாளர் விஜயலட்சுமி மகள் கேண்டி குற்றஞ்சாட்டி உள்ளதுடன், உயிரை
காப்பாற்றுமாறும் செய்தியாளர்களிடம் கதறியது மேலும் உறைய வைத்துள்ளது.
பெண் இன்ஸ்பெக்டர்
சென்னை பத்திரிகையாளர்
மன்றத்தில் செய்தியாளர்களை சந்தித்தபோது கேண்டி சொன்னதாவது: "என்னுடைய
அம்மா இன்ஸ்பெக்டரா இருக்காங்க. என்னுடைய அம்மாவும், அப்பாவும் என்னை
வற்புறுத்தி ஒரு வருஷமாக துபாய் பார்-ல் டான்ஸ் ஆட வைத்து பணம்
சம்பாதித்தார்கள்.
அடியாட்கள்
ஆனால் எனக்கு அதில் சுத்தமா
உடன்பாடு இல்லை. அதனால அங்கிருந்து வெளியேறி என் அண்ணன் வீட்டில் தங்கி
இருந்தேன். போன 23.04.2019 தேதி அன்று என் அம்மாவும், அப்பாவும்
அடியாட்களுடன் வந்து அடித்து கொடுமைப்படுத்தி இழுத்து சென்றார்கள். இதை
அப்பகுதி மக்கள் எல்லாருமே பார்த்தாங்க. அவங்க கிட்ட இருந்து என்னை
காப்பாத்தி போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்து, அதுக்கப்புறம் ஆஸ்பத்திரியில்
அனுமதித்தாங்க.
கொலை மிரட்டல்
அது மட்டும் இல்லை.. என்
அண்ணனின் கடையை தவறான முறையில் அபகரிக்க முயற்சி செய்து வருகின்றனர். என்
அண்ணிகிட்ட 10 லட்சம் ரூபாய் பணமும் நகையும் வரதட்சணையாக வாங்கி தருமாறு
கொலை மிரட்டல் விடுத்தனர்.
பயமா இருக்கு
ஆனால், எங்க அம்மா
இன்ஸ்பெக்டர் என்பதால் அவரை பற்றி எந்த போலீஸ் ஸ்டேஷனில் புகார்
அளித்தாலும் பெரிசா எடுத்துக்கறது இல்லை. இதனால என் உயிருக்கு ஆபத்து
இருக்கு. என்னையும் என் அண்ணன் குடும்பத்துக்கும் பாதுகாப்பு அளிக்க
வேண்டும்" என்றார்.
No comments:
Post a Comment