சென்னை:
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் நளினி, முருகன் உள்பட 7
பேர் ஆயுள் கைதிகளாக சிறைகளில் உள்ளனர். இவர்கள் 7 பேரையும் விடுதலை செய்ய
தமிழக அமைச்சரவையில் கடந்த ஆண்டு செப்டம்பர் 9-ந்தேதி தீர்மானம்
இயற்றப்பட்டது.
இதையடுத்து சென்னை உயர்நீதிமன்றத்தில் நளினி மனு
தாக்கல் செய்தார். அதில், 'எங்கள் 7 பேரையும் விடுதலை செய்ய பரிந்துரை
செய்து ஆவணங்கள் மீது விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும். அந்த மனுவை
விரைவாக பரிசீலிக்க அவர்களுக்கு உத்தரவிட வேண்டும்' என்று கூறியிருந்தார்.
இந்த
மனுவை நீதிபதிகள் ஆர்.சுப்பையா, கிருஷ்ணன்ராமசாமி ஆகியோர் இன்று
விசாரித்தனர். மனுதாரர் சார்பில் வக்கீல் புகழேந்தி ஆஜராகி வாதிட்டார்.
மேலும் மனு மீதான விசாரணையை வருகிற 27ந்தேதி (சனிக்கிழமைக்கு) தள்ளி வைத்து உத்தரவிட்டனர்.
No comments:
Post a Comment