தமிழகத்தில் 22 சட்டசபை தொகுதிகளில் 18 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்தப்பட்டுவிட்டது. மேலும் 4 தொகுதிகளுக்கு மே 19-ஆம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படுகிறது.
இந்த டிடிவி தினகரனுக்கு ஆதரவாக உள்ள கள்ளக்குறிச்சி பிரபு, அறந்தாங்கி ரத்தினசபாபதி, விருத்தாசலம் கலைச்செல்வன் ஆகிய எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்ய அதிமுக கொறடா ராஜேந்திரன் பரிந்துரை செய்துள்ளார்.
இதுகுறித்து
அடையாறில் உள்ள டிடிவி தினகரன் வீட்டில் அக்கட்சியினர் ஆலோசனை நடத்தினர்.
இந்த ஆலோசனைக்கு பிறகு அமமுகவின் வெற்றிவேல் கூறுகையில் கலைச்செல்வன் ,
ரத்னசபாபதி , பிரபு மூன்று பேரும் அமமுகவில் இல்லை. அவர்கள் மூன்று பேரும்
அதிமுக தான்.
தேர்தலில்
தோற்றுவிடுவோம் என்ற பயத்தினால் குறுக்குவழியில் இதுபோன்று அதிமுகவினர்
செயல்படுகின்றனர். தமிமுன்அன்சாரி, திமுகவுக்கு ஆதரவு கொடுத்தால் தவறு
இல்லை , ஓபிஎஸ் அதிமுக எதிராக வாக்களித்தால் தெரிவித்தது தவறு இல்லை.
சபாநாயகர் ஒருதலைபட்சமாக தொடர்ந்து செயல்படுகிறார். அதிமுகவினருடைய இதுபோன்ற செயல்பாடுகளுக்கு எல்லாம் பின்விளைவுகளை சந்திக்க நேரிடும்.
சபாநாயகர் மீது ஸ்டாலின் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்தாலும் பலனில்லை.
அந்த
மூன்று பேரும் தகுதிநீக்கம் செய்யப்பட்டால் அவர்களுக்கு அமமுக துணை
நிற்கும். அதிமுக எம்எல்ஏக்கள் 3 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டாலும்
தேர்தலை சந்திப்போம். தகுதி நீக்கத்தை எதிர்த்து நீதிமன்றம் செல்லமாட்டோம்.
அந்த
மூவருக்கும் அமமுக சார்பில் போட்டியிட வாய்ப்பு கொடுக்க தயார். ஆனால்
முடிவை அவர்கள் எடுப்பார்கள். எங்களது ஸ்லீப்பர் செல்கள் அதிமுகவில்
இன்னும் உள்ளனர். ஸ்லீப்பர் செல்களில் சில அமைச்சர்களாக உள்ளனர் என்றார்
அவர்.
No comments:
Post a Comment