
பொள்ளாச்சி பாலியல் விவகாரம் தொடர்பாக பார் நாகராஜ் கோவை அவிநாசி
சாலையில் உள்ள சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் விசாரணைக்காக இன்று
ஆஜராகியுள்ளார்.
பொள்ளாச்சி
மாக்கினாம்பட்டியை சேர்ந்த திருநாவுக்கரசு மற்றும் அவரது நண்பர்கள் முகநூல்
மூலம் கல்லூரி மாணவிகளிடம் நட்பாக பழகி ஆபாச படம் எடுத்து, பாலியல்
தொந்தரவு கொடுத்ததாக பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்ட
பெண் புகார் ஒருவர் அளித்திருந்தார். இந்த புகாரை அடுத்து சம்பந்தப்பட்ட
மூன்று பேரை காவல்துறையினர் கைது செய்தனர். இதனை அடுத்து, இந்த வழக்கின்
முக்கிய குற்றவாளியான திருநாவுக்கரசு தலைமறைவாய் இருந்தார். பின்னர்,
காவல்துறையினர் தனிப்படை அமைத்து முக்கிய குற்றவாளி திருநாவுக்கரசையும்
கைது செய்தனர்.
இதையடுத்து, இந்த வழக்கு மாவட்ட போலீசாரிடமிருந்து
சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு மாற்றப்பட்டது. இது தொடர்பாக, சி.பி.சி.ஐ.டி.
போலீசார் பொள்ளாச்சி மாக்கினாம்பட்டியில் உள்ள திருநாவுக்கரசின் வீடு,
பண்ணை வீடு மற்றும் இதர குற்றவாளிகளின் வீடு என பல்வேறு பகுதிகளில்
சோதனையில் ஈடுபட்டனர். மேலும், இந்த வழக்கு தொடர்பாக திருநாவுக்கரசின்
சம்பந்தப்பட்ட பல நபர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அதேபோல,
தமிழக காங்கிரஸ் கமிட்டியின் மாநில பொறுப்பாளர் மயூரா ஜெயக்குமாருக்கும்
சம்மன் அனுப்பப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
இந்த நிலையில்,
தி.மு.க.வின் கோவை புறநகர் தெற்கு மாவட்டப் பொறுப்பாளர் தென்றல் செல்வராஜ்
மகன் மணிமாறனுக்கு சி.பி.சி.ஐ.டி. போலீஸ் சம்மன் அனுப்பியுள்ளனர். அதேபோல,
பார் நாகராஜும் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பியிருந்தனர். இந்த நிலையில்,
தற்போது பார் நாகராஜ் கோவை - அவினாசி சாலை மேம்பாலம் அருகே உள்ள
சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் ஆஜராகியுள்ளார். இவரிடம் சி.பி.சி.ஐ.டி.
போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
newstm.in
No comments:
Post a Comment