
தேனி: பிரதமர் மோடி மக்களுக்கு 15 லட்சம் ரூபாய் அல்ல, வெறும் 15
ரூபாய் கூட மக்களிடத்தில் கொடுக்கவில்லை என்று திமுக தலைவர் ஸ்டாலின்
பிரச்சாரத்தில் பேசியுள்ளார்.
லோக்சபா தேர்தல் மற்றும் தமிழக
சட்டமன்ற இடைத்தேர்தலுக்காக திமுக தலைவர் ஸ்டாலின் தற்போது தீவிரமாக
பிரச்சாரம் செய்து வருகிறார். இதனால் தேர்தல் களம் சூடுபிடித்து
இருக்கிறது.
ஆண்டிப்பட்டியில் இன்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின்
பிரச்சாரம் செய்தார். காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்,
பெரியகுளம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் கே.எஸ் சரவணன், ஆண்டிபட்டி திமுக
வேட்பாளர் ஏ. மகாராஜன் ஆகியோரை ஆதரித்து பிரச்சாரம் செய்தார்.
ஸ்டாலின்
ஸ்டாலின் பேச்சு
ஸ்டாலின் தனது பேச்சில், பல நாட்களாக தமிழக விவசாயிகள் டெல்லியில் போராட்டம் செய்தனர்.
அவர்களுக்கு ஆதரவாக பிரதமர் மோடி குரல் கொடுக்கவில்லை.
அவர்களை கோரிக்கையை நிறைவேற்றவில்லை. அதெல்லாம் கூட பிரச்சனையில்லை. ஆனால்
அவர்களை சந்திக்க கூட மோடிக்கு மனமில்லை.
நல்ல விஷயம்
வேலை
நீங்களே
சொல்லுங்கள் மோடி ஆட்சியில் என்ன நல்ல விஷயம் நடந்தது. மோடி மக்களுக்கு
செய்த ஒரு நல்ல விஷயம் இதுதான் என்று கூறுங்கள். பணமதிப்பிழப்பு நீக்கம்
தொடங்கி மோடி செய்தது எல்லாம் மோசடி. மோடியால் உங்களில் ஒருவருக்கு வேலை
கிடைத்தது என்று கூறுங்கள்.
திமுக
வாக்குறுதி
மக்களுக்கு
திமுக பல உறுதிமொழிகளை கொடுத்தது. உறுதி மொழிகளை கொடுத்தது மட்டுமில்லாமல்
அதை நிறைவேற்றினோம். இப்படி மோடி ஏதாவது உறுதிமொழி கொடுத்து அதை
நிறைவேற்றினாரா? கருப்பு பணத்தை மீட்பதாக மோடி கூறினார். ஆனால் மோடி அதை
செய்யவில்லை.
மோடி
மோடி ரூபாய்
15
லட்சம் ரூபாய் கொடுப்பதாக மோடி கூறினார். ஆனால் அவர் செய்யவில்லை. 15
லட்சம் வேண்டாம். ஒரு 15 ஆயிரம்.. அட்லீஸ்ட் ஒரு 15 ரூபாயாவது மோடி
மக்களுக்கு கொடுத்தாரா. மோடி கடைசியில் சர்வாதிகார ஆட்சி நடத்தியதுதான்
மிச்சம் என்பது மக்களுக்கு தெரியும் என்று, ஸ்டாலின் பேசி இருக்கிறார்.
No comments:
Post a Comment