
இணையத்தில் ஒரு போட்டோ வைரலாகி வருகிறது. அது எம்ஜிஆர் அம்மா தீபா
பேரவையின் தீபா-மாதவனின் புகைப்படம்தான். இது மீம்தான்.. ஆனால் கலகலக்க
வைத்துள்ளது.
தேர்தல் பரபரத்து வரும் வேளையில், ஒரு சத்தமும் இல்லாமல் ஒதுங்கி
இருக்கிறார் தீபா. கூட்டணி எங்காவது வைக்க போகிறாரா? அதிமுகவுக்கு ஆதரவாக
பிரச்சாரம் செய்ய போகிறாரா? ஒருவேளை சத்தமே இல்லாமல் 5-வது அணி அமைக்கும்
பணியில் இறங்கி உள்ளாரா என்ற விவரம் எதுவும் தெரியவில்லை.
ஆனால் கட்சி இருக்கோ இல்லையோ.. ஏதாவது செய்து லைம்லைட்டிலேயே இருப்பவர்தான்
தீபா. இப்போது இவர் சும்மா இருந்தாலும் நெட்டிசன்கள் சும்மா விடுவதில்லை.
கணவர் மாதவன்
இந்த நிலையில், ஒரு போட்டோ இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அது எம்ஜிஆர்
அம்மா தீபா பேரவையின் துணை பொதுச்செயலாளராக தனது கணவர் மாதவனை நியமித்த
போது எடுக்கப்பட்ட போட்டோதான்.

பொதுச்செயலாளர்
அப்போது தீபா, "எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவையின் துணை பொதுச்செயலாளராக
மாதவன் நியமிக்கப்பட்டுள்ளார் என்றும் அவருக்கு உறுப்பினர்கள் அனைவரும்
ஒத்துழைப்பு தர வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டு ஒரு அறிக்கையினையும்
வெளியிட்டிருந்தார்.
40 தொகுதிகள்
இப்போது இந்த போட்டோவை பதிவிட்டு, அதன் கீழே நெட்டிசன்களே வரும் தேர்தலில்
40 தொகுதியையும் பிரித்து இந்த பேரவைக்கே தந்துவிட்டார்கள். அதில்,
"தமிழகத்தில் இரண்டாவது கூட்டணி உறுதியானது... மாதவன் மற்றும் தீபா கூட்டணி
கையெழுத்தானது..எனக்கு 20 உனக்கு 18 டிரைவர்க்கு 2" என்று கிண்டலாக
பதிவிட்டுள்ளனர்.
கேள்விப்பட்டதே இல்லை
இருக்காதா பின்னே? கட்சி ஆரம்பித்து ஒரு வருஷம் ஆக போகிறது, ஆனால் இதுவரை
கட்சி ரீதியான செயல்பாடுகள், ஆக்கப்பூர்வமான பணிகள் என்ன என்று
தெரியவில்லை. அதேபோல இக்கட்சியில் தீபா, கணவன் மாதவன், கார் டிரைவர் ராஜா
என 3 பேரை தவிர வேறு பெயர்களை நாம் இதுவரை கேள்விப்பட்டதே இல்லை.
ஜெயலலிதாவின் அண்ணன் மகள் என்ற ஒரே காரணத்திற்காக தீபாவின் பெயரை நாம்
உச்சரித்து கொண்டிருக்கிறோமே தவிர, வேறு ஒரு பிரயோஜனமும் இதுவரை காணோம்!
என்னவோ போங்க மாதவன்!
No comments:
Post a Comment