
காங்கிரஸ், பாஜக உள்பட பல கட்சிகளில் தற்போது
எம்பியாக இருக்கும் பலருக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு கிடைக்கவில்லை.
வாய்ப்பு கிடைக்காத ஒருசிலர் அமைதியாகவும் ஒருசிலர் மாற்று கட்சிக்கும்
தாவி வருகின்றனர்.
இந்த நிலையில்
தேர்தலில் போட்டியிட தனக்கு சீட் மறுக்கப்பட்ட நிலையில் தனது ஆதரவாளர்களின்
கோஷத்தால் கண்ணீர் விட்டு உத்தரபிரதேச பாஜக எம்.பி. பிரியங்கா ராவத் அழுத
காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
தேர்தலில் சீட் கிடைக்காவிட்டாலும், தொகுதி மக்கள் தன் மீது
வைத்திருக்கும் அன்புக்கும் பாசத்திற்கும் கட்டுப்பட்டு அவர்களுக்காக
தொடர்ந்து சேவை செய்வேன் என்று பிரியங்கா ராவத் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment