
குக்கர் சின்னத்தை சுயேட்சை வேட்பாளர்களுக்கு ஒதுக்கக் கூடாது என தமிழ்நாடு முஸ்லீம் லீக் கட்சி சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது.
தேர்தலில்
குக்கர் சின்னம் ஒதுக்கக் கோரி அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின்
(அமமுக) துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன், வி.கே.சசிகலா
ஆகியோர் சார்பில் அளிக்கப்பட்ட கோரிக்கையை உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை நிராகரித்தது.
ஆகியோர் சார்பில் அளிக்கப்பட்ட கோரிக்கையை உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை நிராகரித்தது.
எனினும்,
பொதுச் சின்னத்தில் ஏதாவது ஒன்றை டி.டி.வி. தினகரன் தலைமையிலான அணிக்கு
அளிக்குமாறு தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டது. இதற்கிடையே, இந்த உத்தரவை
வேறு எந்த வழக்கிலும் முன்மாதிரியாகக் கொள்ளக் கூடாது என்று தேர்தல் ஆணையம்
முன்வைத்த கோரிக்கையையும் உச்சநீதிமன்றம் நிராகரித்தது.
இந்நிலையில் உச்சநீதிமன்ற உத்தரவின்படி
டி.டி.வி. தினகரனின் அ.ம.மு.க.வுக்கு பொதுச் சின்னமாக பரிசுப் பெட்டி
சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு செய்துள்ளது. இதனை கடிதம் மூலமாக
தினகரன் தரப்புக்கு தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதையடுத்து வரும்
மக்களவை மற்றும் சட்டப்பேரவை இடைத்தேர்தலில் அ.ம.மு.க. வேட்பாளர்கள்
அனைவரும் பரிசுப் பெட்டி சின்னத்தில் போட்டியிட உள்ளனர்.
இந்நிலையில்
குக்கர் சின்னத்தை பல சுயேட்சை வேட்பாளர்கள் தங்களுக்கு ஒதுக்கும்படி
கோரிக்கை விடுத்துள்ளதால் குக்கர் சின்னத்தை சுயேட்சை வேட்பாளர்கள்
யாருக்கும் ஒதுக்கக் கூடாது என தலைமை தேர்தல் அதிகாரியிடம் தமிழ்நாடு
முஸ்லிம் லீக் சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது. இந்த மனுவை தேர்தல்
அதிகாரிகள் பரிசீலனை செய்து வருகின்றனர்.
No comments:
Post a Comment