
பாஜக உயர்மட்ட தலைவர்களுக்கு கர்நாடக முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பா
கோடிக்கணக்கில் பணம் வழங்கியதாக சிக்கிய டைரி ஆதாரமாக ஏற்றுக்
கொள்ளப்படாது என்று கூறப்படுகிறது.
பாஜக உயர்மட்ட தலைவர்களான ராஜ்நாத்சிங், எல்.கே.அத்வானி, நிதின்கட்கரி
உள்ளிட்டோருக்கு, கர்நாடக முதல்வராக இருந்த போது, எடியூரப்பா 1,800 கோடி
ரூபாய் வழங்கியுள்ளதாக காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.
மேலும், எடியூரப்பாவின் டைரி தொடர்பாக லோக்பால் விசாரிக்க வேண்டும் என்றும்
வலியுறுத்தப்பட்டுள்ளது.
காங்கிரஸ் கேள்வி
எடியூரப்பாவின் கையெழுத்து அடங்கிய டைரி 2017-ம் ஆண்டிலிருந்து வருமான
வரித்துறையிடம் உள்ளது என்றும் இதுகுறித்து ஏன் இதுவரை விசாரணை
நடைபெறவில்லை என்றும் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
திவாலான யோசனை
வருமான வரித்துறை டைரி விவகாரம் தொடர்பாக பதிலளித்துள்ள எடியூரப்பா,
காங்கிரஸ் தலைவர்களின் திவாலான யோசனை இது என கூறியுள்ளார். இந்தநிலையில்,
ஜெயின் ஹவாலா வழக்கை உதாரணம் காட்டி, எடியூரப்பாவின் டைரியை நீதிமன்றம்
ஆதாரமாக ஏற்றுக் கொள்ளப்பட முடியாது என சட்ட வல்லுனர்கள் கருத்து
தெரிவித்துள்ளனர்.
சான்றாக இருக்காது
இந்திய ஆதாரச் சட்டத்தின் பிரிவு 34 இன் கீழ், வியாபாரத்தில் உள்ளவர்கள்
வழக்கமாக வைத்திருக்கும் கணக்கு புத்தகத்தில் உள்ள பதிவுகளை, நீதிமன்றம்
விசாரிக்க பொருத்தமானதாக இருக்கும் என கூறப்படுகிறது. ஆனால் அத்தகைய
பதிவுகள், எந்தவொரு தனி நபருக்கும் பொருத்தமான, போதுமான சான்றாக இருக்காது
என சொல்லப்படுகிறது.
ஜெயின் ஹவாலா வழக்கு
மேலும், பல்வேறு வழக்குகளில் டைரிகள் மற்றும் துண்டு சீட்டுகளை
உச்சநீதிமன்றம் சான்றுகளாக ஏற்றுக் கொள்ளவில்லை என்றும் விளக்கமளித்துள்ள
சட்டவல்லுநர்கள், எல்.கே. அத்வானி மற்றும் வி.சி சுக்லா ஆகியோருக்கு எதிரான
ஜெயின் ஹவாலா வழக்கில் மார்ச் 2, 1998 ல் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை
உதாரணமாக தெரிவித்துள்ளனர்.

No comments:
Post a Comment