உடல்நிலை சரியில்லாத காரணத்தால், தேமுதிக தலைவர் விஜயகாந்த் தேர்தல்
பிரசாரம் செய்யமாட்டார் என கருதப்பட்ட நிலையில், அவர் நிச்சயம் பிரசாரம்
மேற்கொள்வார் என அவரது மனைவி பிரேமலதா தெரிவித்துள்ளார்.
வரும்
நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் தேமுதிக
போட்டியிடுகிறது. தேமுதிகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில்,
கட்சியின் பொருளாளர்பிரேமலதா வரும் 26ம் தேதி முதல் தீவிர பிரசாரத்தில்
ஈடுபட உள்ளார். மாநிலம் முழுவதும் அதிமுக கூட்டணி சார்பாக அனைத்து
வேட்பாளர்களுக்கும் ஆதரவாகப் அவர் பிரசாரம் செய்ய உள்ளார்.
இந்த
நிலையில், உடல்நிலை சரியில்லாத காரணத்தால், விஜயகாந்த் தேர்தல்
பிரசாரத்தில் ஈடுபடுவது குறித்து சந்தேகம் இருந்தது.
அதுகுறித்து பேசிய பிரேமலதா, "கேப்டன் விஜயகாந்த்
நிச்சயம் பிரசாரம் மேற்கொள்வார் என்றும், அவரது முகத்தை காட்டினால் மக்கள்
வாக்களிப்பார்கள்" என்றும் தெரிவித்தார்.
newstm.in

No comments:
Post a Comment