
நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு, விவசாயிகளின் கழுத்தை நெரித்து வருவதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளார்.
மக்களவைத்
தேர்தலில் திமுக கூட்டணியின் இடம்பெற்றுள்ள காங்கிரஸ், மதிமுக, விடுதலைச்
சிறுத்தைகள், இந்திய ஜனநாயகக் கட்சி உள்ளிட்ட கட்சிகளின் வேட்பாளர்களுக்கு
ஆதரவாக மு.க. ஸ்டாலின், வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார்.
திண்டுக்கல்லில் மணிக்கூண்டு அருகே நடைபெற்ற பரப்புரைப்
பொதுக்கூட்டத்தில், திண்டுக்கல் மக்களவைத் தொகுதி வேட்பாளர் வேலுச்சாமி,
நிலக்கோட்டை சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் சவுந்தரபாண்டியன் ஆகியோரை
ஆதரித்து ஸ்டாலின் உரையாற்றினார்.

அப்போது,
முந்தைய காலங்களில் தான் கட்சிப் பணிகளுக்காக திண்டுக்கல் மாவட்டத்துக்கு
வந்தபோது, ஏற்பட்ட இனிய அனுபவங்களை ஸ்டாலின் நினைவு கூர்ந்தார்.
பின்னர் பாஜக அரசின் நடவடிக்கைகளை விமர்சனம் செய்து பேசிய
அவர், விவசாயிகளுக்கு ஜிஎஸ்டி வரி விதித்த அரசு மோடி அரசு என்று
குறிப்பிட்டார். அத்துடன் விவசாயிகளின் கழுத்தை பாஜக அரசு நெரிப்பதாக
கூறினார். மேலும், பொள்ளாச்சி பாலியல் கொடூரத்தில், திமுகவை
சம்பந்தப்படுத்தும் முயற்சிகள் நடப்பதாக குற்றம்சாட்டிய ஸ்டாலின், முறையான
விசாரணை நடத்தினால் உண்மை வெளியாகும் என்று தெரிவித்தார்.
No comments:
Post a Comment