
சென்னை சேப்பாக்கம் மைதானத்தின் அருகே உரிய அனுமதியின்றி
வைக்கப்பட்டிருந்த 3 தற்காலிக செல்போன் டவர்களைகாவல்துறையினர்தங்கள்
கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.
கடந்த 23 ஆம் தேதி சென்னை
சேப்பாக்கம் மைதானத்தில் ஐ.பி.எல் போட்டி நடைபெற்றது. ஏராளமான ரசிகர்கள்
போட்டியை காண வருவதால் செல்போன் சிக்னல் பிரச்சினைகளை தவிர்ப்பதற்காக கலச
மஹால் வளாகத்தின் உள்ளே ஜியோ மற்றும் வோடபோன் நிறுவனங்கள் தற்காலிக டவர்கள்
அமைந்தன.

அதேபோல் சேப்பாக்கம் பறக்கும் ரயில் நிலையம் அருகே ஏர்டெல் நிறுவனம் தற்காலிக டவர் அமைத்திருந்தது.
இந்நிலையில், இந்த தற்காலிக செல்போன் டவர்கள் மற்றும்
மூன்று செல்போன் கோபுரங்கள் அமைக்கமுறையாக அனுமதி பெறவில்லை என அண்ணா
சதுக்கம் காவல்துறையினர் இன்று அவற்றை கைப்பற்றிதங்கள் கட்டுப்பாட்டுக்குள்
கொண்டு வந்துள்ளனர்.
newstm.in
No comments:
Post a Comment