Latest News

  

3 மணி நேரம்... ரயில்வே அதிகாரிகளை பாடாய் படுத்தி எடுத்து விட்ட வடநாட்டு இளைஞர்!


கன்னியாகுமரி: 3 மணி நேரம்... ரயில்வே அதிகாரிகளை வடநாட்டு இளைஞர் ஒருவர் பாடாய் படுத்தி எடுத்து விட்டார்!
நாகர்கோயில் ஜங்ஷன் ரயில்வே ஸ்டேஷன் எப்பவுமே பரபரப்பாக இருக்கும். இந்நிலையில், இன்று காலை ஸ்டேஷனுக்கு ஒரு வடநாட்டு இளைஞர் வந்தார்.

திடீரென ஹை வோல்டேஜ் கரண்ட் செல்லக்கூடிய அதாவது உயர் அழுத்த மின்சாரம் செல்லும் மின்கம்பத்தில் ஏறி உட்கார்ந்து கொண்டு தற்கொலை மிரட்டல் விடுத்தார். அவர் உடம்பில் சட்டை கூட இல்லை.

பதட்டம்
சூழ்ந்து கொண்டனர்
இதனால் ரயில்வே ஷ்டேஷனில் இருந்த எல்லோருமே பதட்டமடைந்து விட்டனர். உடனடியாக போலீஸ் மற்றும் ரயில்வே அதிகாரிகளுக்கு தகவல் சொல்லப்பட்டது. மற்ற பயணிகளும் அங்கு சூழ்ந்து விட்டனர்.

இளைஞர்
பெரிய துணி
ஒரு பக்கம் கீழே இறங்கி வருமாறு அந்த இளைஞருக்கு சைகை காட்டுகிறார்கள்.. கீழே இருந்து பொதுமக்கள் சத்தம் போடுகிறார்கள்.. இன்னொரு பக்கம் இளைஞர் கீழே விழுந்தால் பிடிப்பதற்காக ஒரு பெரிய துணியை 20-க்கும் மேற்பட்டோர் விரித்து பிடிக்கிறார்கள். ஆனால் இது எல்லாவற்றையும் பார்த்து கொண்டிருந்த அந்த இளைஞரோ எதற்குமே மசியவில்லை.. கீழேயும் இறங்கி வரவில்லை.
வரவில்லை
வேண்டுகோள்
ரயில் நிலைய அதிகாரிகள், போலீசார் பலமுறை வேண்டுகோள் விடுத்தும் அதையும் அந்த இளைஞர் காதில் வாங்கவில்லை. இப்படியே 3 மணி நேரம் போய்விட்டது. கடைசியில் நீண்ட நேர போராட்டத்திற்கு பின்னர் தீயணைப்பு மற்றும் மீட்பு பணி துறையினர் இளைஞரை மீட்டு கீழே கொண்டு வந்தனர்.

அமர்க்களம்
ரயில்கள் தாமதம்
இளைஞர் செய்த அமர்க்களத்தால், மங்களூர் எக்ஸ்பிரஸ் ரயில் உட்பட 7 ரயில்களின் போக்குவரத்து பாதிக்கப்பட்டதுடன், 2 ரயில்களும் லேட்டாக புறப்பட்டு சென்றன. அந்த இளைஞர் யார், என்ன என்ற விவரம் தெரியவில்லை. ஆனால் மன நலம் பாதிக்கப்பட்டவர் என முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.


No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceTemplateism Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.