
வியாசர்பாடி பகுதியை சேர்ந்தவர் சரவணன் (28)
வெள்ளிப்பட்டறை நடத்தி வருகிறார். இவரது மனைவி தில்லி ராணி. இவர்களுக்கு
கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் திருமணம் நடந்தது.
புதுமண
தம்பதிகளான இவர்கள் ஆரணியில் உள்ள தாய் வீட்டிற்கு செல்ல இன்று கோயம்பேடு
வந்தனர். காலை 7.30 மணியளவில் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து ஆரணி
செல்லும் பேருந்தில் ஏறி அமர்ந்தனர்.
பேருந்து
புறப்பட்டு நெற்குன்றம் அருகே வந்தபோது தலைக்கு மேல் வைத்திருந்த சூட்கேசை
திறந்து பார்த்தனர். அப்போது பெட்டிக்குள் வைத்திருந்த 22 பவுன் நகைப்பை
காணவில்லை. அதை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.
இதுகுறித்து கோயம்பேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை
நடத்தினார்கள்.
.

No comments:
Post a Comment