
செலவு
பொறுப்பேற்றவுடன்
எல்லாம் முடிந்துபோய்விடவில்லை. இதுவரை இந்த 5 வருஷங்களில் ரூ.3,000
கோடிக்கு மேல் வெறும் விளம்பரத்துக்காகவே செலவு செய்துள்ளதாக
தெரியவந்துள்ளது. அதுவும் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் இந்த விஷயம்
வெளிவந்துள்ளது.
இந்த முறை பாஜக தேர்தலில் எவ்வளவு செலவு செய்ய போகிறது தெரியுமா?
2014-ம்
ஆண்டு மோடி ஃபேமஸ் ஆனதே அவர் செய்த கலர் கலர் விளம்பரங்களால்தான்! குஜராத்
வரை மட்டுமே அறிந்த மோடியை பட்டிதொட்டி எங்கும் அறிய செய்ததில்
முக்கால்வாசி பங்கு மீடியாக்களுக்குதான் போய்ச்சேரும்.
பண மழை கொட்ட கொட்ட உச்சத்தில் கொண்டு போய் மோடியை உட்கார வைத்தது மீடியாக்கள்தான்.
இதன்பிறகுதான் டிஜிட்டல் இந்தியா, கிளீன் இந்தியா, அச்சே தீன் என்ற சுண்டி இழுக்கும் வார்த்தைகளை கூறி 5 வருடங்களுக்கு முன்பு பிரதமராக பொறுப்பேற்றார் மோடி.
எதிர்க்கட்சிகள்
அதனால்தான்,
எதிர்க்கட்சிகள் இஷ்டப்படி விமர்சனத்தை முன்வைத்து வருகின்றன. இப்போது
திரும்பவும் தேர்தல் வரப்போகிறது. இந்த முறை பாஜக என்னென்ன விளம்பரங்களை
எல்லாம் மக்களிடம் கொண்டு போய் சேர்க்க போகிறதோ தெரியவில்லை.
ஆங்கிலம், இந்தி
பிரதமர்
சம்பந்தப்பட்ட விளம்பரம் என்று எடுத்து கொண்டால், அதை கண்டிப்பாக
ஆங்கிலத்திலும் இந்தியிலும் பிராந்திய மொழிகளில் டப்பிங் செய்யப்பட
வேண்டியது அவசியமாகிறது. இப்படியெல்லாம் விளம்பரம் செய்யும் பணம் எல்லாமே
மக்களின் வரிப்பணம்தான்.
1000 கோடி
ஆனால்,
கட்சி வாரியான செலவு தொகையை கணக்கிட்டால், பாஜக தரப்பு மட்டும் ரூ.2,000
கோடி செலவு செய்யும் என்ற விஷயம் தெரியவந்துள்ளது. இந்த 2000 கோடியில்,
1000 கோடி தேர்தல் பிரச்சாரத்துக்காம். மிச்சம் 1000 ஆயிரம் கோடி எதற்கு
தெரியுமா? வேறெதற்கு.. அவ்வளவும் விளம்பரத்திற்குதானாம்!
விளம்பரங்கள்
ஆனால்
காங்கிரஸ் தரப்பிலோ ரூ.200 கோடியிலிருந்து 250 கோடி ரூபாய்க்கு
விளம்பரத்திற்கு செலவு செய்ய உள்ளதாகவும்., திரிணாமுல் காங்கிரஸ் 100 கோடி
ரூபாய் வரை செலவு செய்யலாம் எனவும் கூறப்படுகிறது. இருந்தாலும் பாஜக மாதிரி
விளம்பர செலவு ஆகுமா? எந்தெந்த டிசைன்களில், எந்தெந்த ரூபங்களில்,
மோடியின் விளம்பரங்கள் இருக்க போகிறதோ தெரியவில்லை. ஆனால் மோடியையும்
விளம்பரத்தையும் மட்டும் பிரிக்கவே முடியாது!

No comments:
Post a Comment