
மும்பையைச் சேர்ந்த அப்துலா கான்,
ஐஐடியில் சேர்வதற்காக நுழைவு தேர்வு எழுதியும், தோல்வி அடைந்ததால் ஸ்ரீ
எல்ஆர் திவாரி பொறியியல் கல்லூரியில் தனது பி.இ- கணினி பொறியியல் படிப்பை
தொடர்ந்தார். சமீபத்தில் புரோகிராமிங் சேலஞ் ஒன்றின் மூலம் கானின் புரொபைலை
பார்வையிட்ட கூகுள் நிறுவனம், நேர்காணலில் பங்கேற்க அழைப்பு
விடுத்திருந்தது. நிறுவனம் சார்பில் நடத்தப்பட்ட ஆன்லைன் தேர்வுகளை
எதிர்கொண்ட அவர், இறுதி தேர்வுக்காக லண்டன் சென்றார். அங்கு வெற்றிகரமாக
செயல்பட்ட அவரை வருகிற செப்டம்பர் மாதம் லண்டன் அலுவலகத்தில் சேருமாறு
பணிநியமன ஆணை வழங்கிய கூகுள் நிறுவனம், அவருக்கு ஆண்டு சம்பள தொகையாக ஒரு
கோடியே 20 லட்சத்தை அறிவித்து உள்ளது.
No comments:
Post a Comment