
புதுச்சேரி: தேர்தல் ஆணையம் யாரிடம் காசு வைத்திருந்தாலும்
பிடுங்கும் போல. எங்கு பார்த்தாலும், நகை, பணமாக பறிமுதல் செய்து
வருகின்றனர். இதில் வங்கிப் பணத்தையும் பறிமுதல் செய்வதால் பரபரப்பு கூடி
வருகிறது.
புதுச்சேரியில் உரிய ஆவணங்கள் இன்றி நகைக்கடைக்கு எடுத்து
செல்லப்பட்ட 26 கிலோ தங்கம் நகைகளை தேர்தல் பறக்கும் படையினர் அதிரடியாக
பறிமுதல் செய்தனர். இதேபோல் உரிய ஆவணங்கள் இன்றி வங்கிக்கு எடுத்துச்
செல்லப்பட்ட 24 லட்சம் ரூபாய் ரொக்கமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
புதுச்சேரி
மாநிலத்தில் உள்ள ஒரே ஒரு மக்களவை தொகுதிக்கான தேர்தல் மற்றும் காலியாக
உள்ள தட்டாஞ்சாவடி சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் ஏப்ரல் 18 ஆம் தேதி
நடைபெற உள்ளது.
தேர்தலை நியாயமான முறையில் நடத்துவதற்காக தேர்தல்
துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில், தேர்தல்துறை
அதிகாரிகள், போலீசார் மற்றும் துணை ராணுவப்படையினர் இணைந்து புதுச்சேரி
முழுவதும் பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் பட்டுவாடாவை தடுப்பதற்காக தீவிர
கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
புதுச்சேரி - தமிழக
எல்லைகளான மதகடிப்பட்டு, கன்னிகோவில், முள்ளோடை, திருக்கனூர் உள்ளிட்ட
எல்லையோரப் பகுதிகளிலும் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு வெளிமாநிலங்களில்
இருந்து வரும் வாகனங்கள் தீவிர சோதனைக்குப் பிறகே புதுச்சேரிக்குள்
அனுமதிக்கப்படுகின்றனர்.
source: oneindia.com
No comments:
Post a Comment