
மத்திய பிரதேசம் மாநிலத்தில் கமல்நாத் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி
நடைபெற்று வருகிறது. அங்கு பசு இறைச்சி விவகாரத்தில் மூவருக்கு எதிராக
தேசிய பாதுகாப்பு சட்டம் பாய்ந்ததால் கடும் விமர்சனங்கள் எழுந்தது.
இந்நிலையில்
பெங்களூருவில் தி இந்து பத்திரிக்கையிடம் பேசிய காங்கிரஸ் தலைவரும்,
ராஜஸ்தான் துணை முதல்வருமான சச்சின் பைலட், மாடா? மனிதனா? என்றால்
மனிதனுக்குத்தான் முக்கியத்துவம் தர வேண்டும் என கூறியுள்ளார்.
பசுக்கள்
வதை மற்றும் பசு கடத்தல் விவகாரங்களில் வேறுபாட்டுடன் செயல்பட வேண்டும்.
பெண்கள் மீது பாலியல் பலாத்காரத்தில் ஈடுபடுபவர்களை தண்டிக்கவும், சக
மனிதன் மீது மனிதாபிமானமற்ற முறையில் நடந்துகொள்வதற்கும் கடுமையான
சட்டங்களை உருவாக்க வேண்டும்.
புனிதமான விலங்குகளை காப்பாற்றுவது நல்லது. ஆனால், மாடா?
மனிதனா? என்று வரும்போது மனிதனுக்குத்தான் முக்கியம் தரவேண்டும் என்று நான்
நினைக்கிறேன்.
No comments:
Post a Comment