
கன்னியாகுமரி: நாகர்கோவில் அருகே முன்னாள் கருவூல ஊழியர் மது பாட்டிலால்
குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
கன்னியாகுமரி
மாவட்டம் நாகர்கோவில் அருகே பறக்கை செட்டித் தெருவை பகுதியை சேர்ந்தவர்
முருகேசன் (65). இவர் மாவட்ட கருவூல ஊழியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.
சனிக்கிழமை வீட்டில் இருந்து வெளியே சென்ற முருகேசன் நீண்ட நேரம் ஆகியும்
வீடு திரும்பாததால் அவரது உறவினர்கள் பல்வேறு இடங்களில் அவரை தேடினர்.
இந்நிலையில்,
வீட்டின் அருகில் உள்ள குளத்தின் கரையில் குடல் சரிந்த நிலையில் பிணமாக
கிடந்ததை உறவினர்கள் கண்டனர். மேலும் இது குறித்து அவர்கள் சுசீந்திரம்
போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவல் கிடைத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார்
முருகேசனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு
மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும்,
முருகேசன் பிணமாக கிடந்த இடத்தின் அருகே இருந்து ரத்த கரையுடன் இருந்த
உடைந்த மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். விசாரணையில் பொது
இடத்தில் மது அருந்தியதை முருகேசன் தட்டி கேட்டதால் மர்ம நபர்கள் அவரை கொலை
செய்தது தெரிய வந்துள்ளது. கன்னியாகுமரி டி. எஸ். பி., பாஸ்கரன்
தலைமையிலான போலீசார், சம்பவம் நடந்த இடத்திற்கு அருகே இருந்த சிசிடிவி
கேமிரா காட்சிகளில் பதிவான மர்ம நபர்கள் உருவத்தை கொண்டு தேடி வருகின்றனர்.
source: oneindia.com
No comments:
Post a Comment