மக்கள் நீதி மய்ய பொதுக்கூட்டம் திருநெல்வேலியில் இன்னும் சற்றுநேரத்தில் துவங்குகிறது
மநீம தலைவர் கமல்ஹாசன் தலைமையில் இந்த பொதுக்கூட்டம் நடக்கிறது
மநீம கட்சியின் ஓராண்டு நிறைவையொட்டி தற்போது பொதுக்கூட்டம்
லோக்சபா தேர்தல் குறித்த முக்கிய அறிவிப்பு இதில் வெளியாக வாய்ப்பு
திருநெல்வேலியில் இன்று மக்கள் நீதி மய்யம் சார்பாக மாபெரும்
பொதுக்கூட்டம் தொடங்கியுள்ளது. கமலின் வருகைக்காக மக்கள் காத்துள்ளனர்.
மநீம தலைவர் கமல்ஹாசன் இதில் லோக்சபா தேர்தல் தொடர்பாக முக்கிய அறிவிப்பை
வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மக்கள் நீதி மய்யம் தொடங்கி
ஒருவருடம் நிறைவடைந்ததை அடுத்து இந்த கூட்டம் நடத்தப்படுகிறது.
மநீம தலைவர் கமல்ஹாசன் பொதுக்கூட்டத்தில் பேசவுள்ளார். மக்கள் நீதி
மய்யத்தை சேர்ந்த முக்கிய உறுப்பினர்கள் தற்போது பேசி வருகிறார்கள்.

எனக்கு சீட் கொடுக்க மாட்டேன் என்று சொல்கிறார்கள் - கமல்
நான் என்ன உங்களிடம் சீட் கேட்டேனா?- கமல்
நின்று அடிக்க போறவனுக்கு எதற்கு சீட்: நான் நின்று அடிப்பேன் - கமல்
மக்கள் நலனே எங்கள் குறிக்கோள் - கமல்
சாதி மறந்து எல்லோரும் ஒன்று சேர்வோம் வாருங்கள் - கமல்
இலவசம் கொடுப்பதற்காக மக்களை வறுமை கோட்டிற்கு கீழே தள்ளுகிறார்கள் - கமல்
அரசியவாதிகளே உங்களுக்கு வெட்கமாக இல்லையா?- கமல்
வெட்கம் இருக்கிறதா? இல்லையா? பதில் சொல்லுங்கள் - கமல்
எதையும் செய்ய ஒரு விதிமுறை இருக்கிறது - கமல்
வேன் மேல் ஏறி நம்மை சுட்டார்கள்: மறக்காதீர்கள் - கமல் கோபம்
கேள்வி கேட்டதற்காக மக்கள் வாயில் சுட்டார்கள் - கமல்
சிலர் மருத்துவமனையில் இருந்த போது அடிமட்ட தொண்டன்தான் வந்தான் - கமல்
அவர்களுக்கு அப்போது காசு உதவி செய்யவில்லை - கமல்
கொள்ளை செய்யும் கூட்டமாக அரசியல்வாதிகள் மாறி இருக்கிறார்கள் - கமல்
கேள்வி கேட்டால் வாயில் சுடுகிறார்கள் - கமல்
நம் பிள்ளையைதான் சுட்டார்கள்: நாம் மறக்க கூடாது - கமல்
நாங்கள் பல அறிஞர்களிடம் பேசி வருகிறோம் - கமல்
கொள்கைகள் குறித்து ஆராய்ச்சி செய்து கொண்டு இருக்கிறோம் - கமல்
மக்கள் விரும்பினால் கொள்கைகளை காட்டுவேன் - கமல்
ஆனால் இதற்கு முன் மக்கள் கொள்கையே பார்க்கவில்லை - கமல்
என்னுடைய முக்கிய கொள்கை நேர்மைதான்: அது யாரிடமும் இல்லை - கமல்
நான் சரியாக வரிக்கட்டி வருகிறேன் - கமல்
சொத்து சேர்க்கும் எண்ணம் எனக்கு இல்லை - கமல்
சாகும் போது சொத்து கூட வராது - கமல்
எத்தனை கோடி சேர்த்தாலும், மருத்துவமனையில் இருக்கும் போது எதுவும் உதவாது - கமல்
நான் யாரையும் குறிப்பிடவில்லை - கமல்
காசு சிலருக்கு மருத்துவமனையில் உதவியதா? - கமல்
மக்கள் நீதி மய்யத்தின் தேர்தல் விருப்பமனுவை கமல்ஹாசன் வெளியிட்டார்
ஊழலுக்கு எதிரான யாரும் எங்களிடம் வரலாம் - கமல்ஹாசன்
வாரிசு அரசியலுக்கு எதிரானவர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படும் - கமல்ஹாசன்
நாட்டில் மாற்றத்தை விரும்புபவர்கள் தேர்தலுக்கு வாருங்கள் - கமல்ஹாசன்
உங்கள் பகுதியில் நீங்கள் நம்புவர்களை தேர்வு செய்யுங்கள் - கமல்ஹாசன்
மய்யத்திற்கு வாருங்கள் மக்களே - கமல் அழைப்பு
மநீம செய்ய வேண்டிய சில வேலைகள் உள்ளது - கமல்
தேர்தலுக்கு சில நாட்களே இருக்கிறது - கமல்
நாங்கள் பகல் கனவு காண்பதாக சிலர் நினைக்கிறார்கள் - கமல்
எங்களுக்கு நிறைய தன்னம்பிக்கை இருக்கிறது - கமல்
எங்கள் பணிகள் இங்கு நெல்லையில் இருந்து தொடங்கும் - கமல்
காந்தியை பற்றி பேசுவதால் நான் வேறு கட்சியில் சேர்வதாக நினைக்க வேண்டாம் - கமல்
எங்கள் கட்சிக்கும் காந்திக்கும் சம்பந்தமில்லை - கமல்
என்னுடைய வழிகாட்டிதான் காந்தி - கமல்
No comments:
Post a Comment